த.சத்தியநாராயணன், சென்னை. ''விஜயகாந்த்தின் அரசியல் செயல்பாடு கள் எப்படி இருக்கின்றன?''
''காலம்தான் உரைகல்லாக இருக்கும்!''
கருப்பம்புலம் சித்திரவேலு, நெய்விளக்கு.
''உண்மையைச் சொல்லுங்கள். கோபாலபுரத்தில் சுதந்திரமாக உலவியது போல, போயஸ் தோட்டத்தில் உலவ முடிந்ததா?''
''தி.மு.க-வில் கடுமையாக உழைத்த வன் என்ற முறையில், நினைத்த நேரங்களில் கோபாலபுரத்துக்குச் சென்று இருக்கிறேன்.
ஆனால், ஒரு கட்சியின் பொதுச் செயலா ளர் என்ற முறையில்தான் நான் போயஸ் தோட்டத்துக்குச் சென்று இருக்கிறேன். அப்போது, உரிய மரியாதையோடு நடத்தப்பட்டு இருக்கிறேன்!''
''இன்றைய இளம் நடிக, நடிகைகளில் தங்களைக் கவர்ந்தவர் யார்?''
''ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றார்கள். ஒருவரை மற்றவரோடு ஒப்பிட விரும்பவில்லை!''
வி.சிஜேன் மாதவன், மயிலாடுதுறை.
''தங்களின் உடனடி இலக்கு... தமிழ் ஈழமா? சேது சமுத்திரத் திட்டமா? ஆட்சியைப் பிடிப்பதா?''
''அறமும் நெறியும் ஓங்கிய தொல் பழங்காலத் தமிழகத்தின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் இன்றைய சிதைவில்இருந்து மீட்டு எடுப்பது; தமிழகத்தின் வாழ்வாதாரங் களைக் காப்பது; ஊழல் அற்ற அரசியலை வென்றெடுப்பது; சாதி, மதப் பூசல் அற்ற மனிதநேயம் ஓங்கிட, மறுமலர்ச்சி பெறும் தமிழகம்; சுதந்திரத் தமிழ் ஈழ நாடு... இவையே என் இலக்குகள்!''
ஆ.பிரபு, சென்னை.
''எம்.ஜி.ஆர். ஆட்சி; கலைஞர் ஆட்சி; ஜெயலலிதா ஆட்சி; யாருடைய ஆட்சி பொற்கால ஆட்சி? மழுப்பாமல் பதில் சொல்லுங்கள்?'' ''இந்த மண்ணுக்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியது;
சுய மரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கியது;
இந்திக்கு இங்கே இடம் இல்லை என அகற்றியது;
எள் முனை அளவு ஊழல் குற்றச்சாட்டுக் கும் இடம் இன்றிப் பணி ஆற்றியது; எதிர்க் கட்சியினரை உயர்வாக மதித்து, ஜனநாய கத்தைப் போற்றியது...
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்; மேடைகளில், ஏடுகளில், பாமர மக்கள் மனங்களில், தமிழுக்கு மகுடம் சூட்டிய அண்ணா அவர்களின் ஆட்சிதான், தமிழரின் பொற்கால ஆட்சி என்பேன்.
பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு அரசின் ஏற்பு அளித்தது; தனக்கென்றுஎதை யும் சேர்க்காதது, தியாகச் சுடர் காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தைக் கோடானுகோடிக் குடும்பங்களின் பிள்ளைகளுக்குச் சத்து உணவுத் திட்டமாக ஆக்கியது; தமிழ் ஈழ விடுதலைப் போருக்கும் தளம் அமைத்துக் கொடுத்தது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆட்சியின் மாண்புகள் ஆகும். மற்ற இருவர் ஆட்சியைப் பற்றிய மதிப்பீட்டை, இப்போது நான் செய்ய விரும்பவில்லை. அதை விரிவாக விளக்க வேண்டும்!''
எஸ்.பவதாரிணி, ஆலத்தம்பாடி.
''திடீர் திடீரென உணர்ச்சிவசப்பட்டு அழுவது, உங்கள் பலவீனம் என்கிறார்களே?''
''வேறு எதுவும் சொல்ல முடியாதவர்கள் என் மீது வைக்கும் விமர்சனம் இது.
'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்’
என்று வான்மறையில் வள்ளுவப் பெருந்தகை சொன்னார்.
பிறரது துன்பத்தை, துயரைக் காண்கையில், எண்ணுகையில், என் கண்களில் நீர். ஆபத்துகளுக்கோ, மரணமே வந்திடுமோ என்ற அச்சத்துக்கோ, கலங்கியதும் இல்லை, கண்கள் கசிந்ததும் இல்லை!''
ஆ.பிரபு, சென்னை.
''அரசியலுக்கு வந்தது தவறு என்று எப்போதாவது வருத்தப்பட்டதுஉண்டா?''
1993 அக்டோபர் 3-ல், கொலைப் பழி சுமத்தப்பட்டபோது வருந்தினேன்!''
கே.ஆண்டனி, நாகப்பட்டினம்.
''கூட்டணியைவிட்டு உங்களை ஜெயலலிதா வெளியேற்ற, உண்மையான காரணம் என்ன?''
''1998-ல் அண்ணா தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்த வேளையில், அவருடன் நான் பேசிக்கொண்டு இருந்தபோது, 'யூ ஆர் மை காம்பெட்டிடர்’ (நீங்கள்தான் எனக்குப் போட்டியாளர்) என்று சொன்னார்.நான் உடனே அதை மறுத்து, 'நீங்கள் ஒரு பெரிய கட்சியின் பொதுச் செயலாளர். நானோ, அரும்பி மலர்ந்துகொண்டு இருக்கின்ற ஒரு கட்சியின் பொதுச் செயலாளர். என்னை ஏன் போட்டியாளராகக் கருதுகின்றீர்கள்?’ என்றேன். 'உங்களுக்குத் தகுதி இருக்கின்றது. ஏன் வரக் கூடாது?’ என்றார். அத்தோடு நான் அதை மறந்துவிட்டேன்.
2006 முதல் ஐந்து ஆண்டுகள், மிக உறுதியாக, நல்ல தோழமை வளர்ந்திட நான் செயல்பட்டும், ஆறு இடங்கள் என்று தொடங்கி, எட்டு இடங்கள் வரை சொல்லி அனுப்பியவர், அதற்கு மறுநாளே, திரு.ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட் டையன் ஆகியோரை என் இல்லத்துக்கு அனுப்பிவைத்து, அந்த எட்டு இடங்களும் தர முடியாது; அதைவிடக் குறைவாகத்தான் தர முடியும் என்று தெரிவித்தபோது, என்னைப் புண்படுத்தி, அ.தி.மு.க-வுக்கு எதிராக அறிக்கைவிட வைப்பதற்கு அவர் முயற்சிக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். ஆனால், அதற்குப் பின்னரும் ஒரு வார காலம் அமைதி காத்தேன்.
கூட்டணியைவிட்டு என்னை வெளியேற்று வதற்கு, உலகக் கோடீசுவரர்களுள் ஒருவர் நடத்துகின்ற தொழில் நிறுவனம் காரணம் என்று சில ஏடுகள் செய்தி வெளியிட்டன. தவறு செய்தால், தவறுகளையும், அநீதி களையும் அடக்குமுறைக்கு அஞ்சாமல் சட்டமன்றத்தில் எதிர்த்துப் போராடுவேன் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அதற்கெல்லாம் ஏன் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று தவிர்க்க நினைத்து இருக்கலாம்!''
பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.
''உங்களுக்குப் பிடித்த பேச்சாளர், எழுத்தாளர், இசை அமைப்பாளர், பாடகர் மற்றும் நடனக் கலைஞர்?''
''அண்ணாவின் பேச்சு, கல்கியின் எழுத்து; விஸ்வநாதன் - இராமமூர்த்தி, இளையராஜாவின் இசை; சுசீலா, ஜிக்கி, ஜானகி, டி.எம்.எஸ்., சீர்காழி, ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீநிவாஸின் குரல்; பத்மினியின் நாட்டியம்!''
வி.மருதவாணன், தஞ்சாவூர். ''நாடாளுமன்றத்தில் முதன்முதலாக கன்னிப் பேச்சு பேசும்போது உங்களுக்கு நடுக்கம் இருந்ததா?''
''சட்ட மன்ற அனுபவம் ஏதும் இன்றி, நாடாளுமன்றத்தில் கன்னிப் பேச்சு நிகழ்த்தியபோது, மனதில் ஒரு பரபரப்பும், எவ்விதத்திலாவது முத்திரைப் பதித்துவிட வேண்டுமே என்ற துடிப்பும் உள்ளத்தில் இருந்தது.
1978 ஏப்ரல் 26-ம் தேதி, பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டேன். மே 2-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, மாநிலங்களின் சுயாட்சி உரிமை குறித்துப் பேச, மாநிலங்களின் அதிகாரங்கள் குறித்த தனிநபர் மசோதா மீது பேசுகின்ற வாய்ப்பு கிடைத்தது.
அப்போது நெல்லை மாவட்டத்தில் அதிகமாகப் பாதித்து, வட மாவட்டங்களுக்குப் பரவிக்கொண்டு இருந்த, குழந்தைகளின் உயிர் குடித்த மூளைக் காய்ச்சல் (என்செபாலிடீஸ்) நோய்க் கொடுமையைத் தடுக்க, மத்திய அரசு போர்க் கால நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையேல், அந்நோய் நாடு முழுவதும் பரவும் ஆபத்து உள்ளது என்று பேசினேன். அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை முன்னிறுத்தி, ஆங்கில இலக்கியத்தில் வீரச் சிறுவன் கசாபியங்கா வெளிப்படுத்திய துணிச்சலையும், மரணத்தை எதிர்கொண்ட அவனுடைய தியாகத்தையும் சுட்டிக்காட்டி, நான் ஏற்றுக்கொண்ட கொள் கைக்காக, அவனைப் போல போராடுவேன் என்று பேசினேன். தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் மனதாரப் பாராட்டியதும், இந்த உரையைத் தயாரிப்பதற்கு ஊக்கம் அளித்தவர் முரசொலி மாறன் என்பதும் மறக்க முடியாதவை!''
த.சத்தியநாராயணன், சென்னை. நீங்கள் நடிகர் திலகம் சிவாஜி ரசிகர் என்று கேள்விப்பட்டேன். அவர் நடித்த படங்களில், தங்களால் மறக்க முடியாத படம் எது?''
''பாசமலர்!''
க.ராமலிங்கம், பாபநாசம்.
''உங்களுக்கு இருக்கும் அளவுக்கு அதிகமான தகுதியே, உங்களுக்குத் தடையாக இருக்கிறது என்கிறேன் நான். உங்கள் பதில் என்ன?''
''அளவுக்கு அதிகமான தகுதி எனக்கு இல்லை. பள்ளியிலும் கல்லூரியிலும், படிப்பில் முதல் இடம் பெற்றேன். பேச்சுப் போட்டிகளிலும் முதல் பரிசு வென்றேன். கைப்பந்து, கூடைப்பந்து, கல்லூரி அணிகளில் இடம் பெற்றேன்.
தி.மு.கழகத்தில் உழைப்பதில், தொண்டு செய்வதில், மேடைக் கலையில் முத்திரை பதிப்பதில், சிறைச்சாலைக்கு முதல் ஆளாகச் செல்வதில், தொண்டர்களை நேசித்து அரவணைப்பதில், கட்சிக்குத் தோல்விகள் ஏற்பட்ட காலத்திலும் வெற்றிபுரிக்குக் கொண்டுசெல்லத் துடிப்பதில் என் சக்திக்கு மீறி அர்ப்பணிப்புடன் இருந்தது என் இயல்பு.
1975 சேலம் தி.மு.க. மாநாடு; 78 திருச்சி இந்தி எதிர்ப்பு மாநாடு; 85 கடலூர் தி.மு.க. மாநாடு; இவற்றில் நான் ஆற்றிய உரைகள், மிகுந்த பாராட்டையும் தொண்டர்களிடம் எனக்கு ஈடற்ற ஈர்ப்பையும் ஏற்படுத்தியது.
1987 வரை, எனது நாடாளுமன்றப் பணிகள் பாராட்டப் பட்டன. அரசியல் சட்டத்தின் மொழிப் பிரிவுக்குத் தீயிட்டதற்காக, 10 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி பறிக்கப்பட்டது. எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோகும் என்று மிரட்டிப் பார்த்தார்கள். எனினும், கட்சியின் நலன் மதிப்பைக் கருதி, அரசியல் சட்டப் பிரிவைக் கொளுத்தினேன். நீதிமன்றத்திலும் அரசியல் சட்டத்தைத்தான் கொளுத்தினேன் என்று தனியாக, பிரமாண வாக்குமூலம் கொடுத்தேன்.
1990 பிப்ரவரியில், திருச்சி தி.மு.க. மாநாட்டில், 'உலகைக் குலுக்கிய புரட்சிகள்’ என்ற தலைப்பில், பிற்பகல் 2 மணி அளவில் நான் உரை ஆற்றியதும், 1993 மார்ச் மாதத்தில், கோவை தி.மு.க. மாநில மாநாட்டில், 'மத வெறியும் மக்கள் சீரழிவும்’ என்ற தலைப்பில் நண்பகல் உணவு வேளையில் உரை ஆற்றி யதும் மிகச் சிறந்தவை என்று, தி.மு.கழகத்தின் இலட்சோபலட்சம் தொண்டர்கள் மெச்சினர். அதுவே, அரசியல் வாழ்வில் என்னைத் தாக்கிய இடிகளுக்கும் காரணமாக அமைந்தன.
1998 ஜனவரியில், திருநெல்வேலியில் நடைபெற்ற அண்ணா தி.மு.க. மாநாட்டில், நண்பகலில் நான் ஆற்றிய உரை, எவரும் எதிர் பாராத வரவேற்பைத் தொண்டர்களிடம் ஏற்படுத்தியபோது, அதை அக்கட்சியின் தலைமை ரசிக்கவே இல்லை என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டேன்.
எதிலும் சராசரியாக இருந்திருந்தால், பிரச்னைகளே வராமல்கூடப் போயிருக்கலாம். தடைகள்தாம், சாதனைக்கான படிக்கட்டுகள். மலையளவு பலம்கொண்ட சக்திகளோடு மோதும்போதுதான், போராடும் உரமும் மனதுக்கு நிறைவும் கிடைக்கின்றது!''











நகரங்களின் குடிநீர் ஆதாரமே பெரியாறுதான். கூடலூரில் இருந்து தேனி வரை இருபோகம் விளைகிறது. ''பெரியாறு அணை விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே கவனமாகவும் குள்ளநரித்தனமாகவும் செயல்பட்டு வந்திருக்கிறது கேரளா. நாமோ அதற்கு நேர்மாறாகச் செயல்பட்டு அனைத்தையும் இழக்கும் நிலைக்கு வந்துவிட்டோம்'' என்று சொல்லும் கம்பம் பள்ளத்தாக்கின் பட்டம் படித்த விவசாயிகள், ''அணையில் படகு விடும் உரிமை, மீன் பிடிக்கும் உரிமை, அணையின் நீர்மட்டத்தை நிர்ணயித்தல், அணைப் பாதுகாப்பு என நம்மிடம் இருந்த அத்தனை உரிமை களையும் பல்வேறு காரணங்களைச் சொல்லிப் பறித்துக்கொண்டுவிட்டது கேரள அரசு. நம்முடைய அரசியல்வாதிகளும் விட்டுக்கொடுத்து விட்டார்கள். பெரியாறு அணை தண்ணீரில் இருந்து அதிகபட்சம் ஒரு நாளைக்கு 140 மெகா வாட் மின்சாரத்தை எடுக்கிறோம். இதைக் காட்டிலும் ஏழு மடங்குப் பெரிய அணையை இடுக்கியில் கட்டி இருக்கிறது கேரளா. அங்கே கனடா நாட்டு ஒப்பந்தத்தில் மிகப் பெரிய நீர் மின் திட்டம் ஒன்று செயல்படுகிறது. அந்த அணையின் கொள்ளளவும் 70 டி.எம்.சி. ஆனால், இதுவரை ஒரு தடவை கூட அந்த அணை முழு கொள்ளளவை எட்டியது இல்லை. பெரியாறு அணை இல்லாவிட்டால், அந்தத் தண்ணீரை இடுக்கி அணைக்குக் கொண்டுபோய் இன்னும் கூடுதலாக மின்சாரம் எடுக்க முடியும் என்பதுதான் கேரளாவின் திட்டம். இந்த முறையும் நாம் ஏமாளித்தனமாக இருந்தால் கம்பம் பள்ளத்தாக்கு இன்னொரு ராமநாதபுரமாக மாறிவிடும்'' என்கிறார்கள்.

தங்களுடைய இடத்தில் உள்ள ஓர் அணையின் பயனை தமிழகம் அனுபவிப்பதைச் சகித்துக்கொள்ள முடியாத காழ்ப்பு உணர்வே கேரளத்தின் பிரச்னை. தண்ணீர் மூலம் உருவாகும் மின்சாரமும் தொழில் வளர்ச்சியுமே அதன் உள்நோக்கங்கள்.
உத்தரவிட்டபோது, கேரளம் அதை ஏற்க மறுத்தது. சட்டசபையில் புதிய சட்டம் இயற்றி, அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக நிர்ணயித்தது. ''உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை எனில், உச்ச நீதிமன்றத்தின் புனிதத்தன்மை என்னவாகும்?'' என்று கேள்வி எழுப்பியது உச்ச நீதிமன்றம். ஆனாலும், இன்று வரை யாராலும் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான தண்ணீரைப் பெற்றுத் தர முடியவில்லை. கடைசியாக, அணையையும் தமிழகம் இழக்கப்போகிறதா?
''நதிகள் மீதான அதிகாரம் மத்திய அரசுவசம் இருக்க வேண்டும். தேசிய அளவில் நதி நீர் விவகாரங்களைக் கையாள முழு அதிகாரம் மிக்க தன்னாட்சி அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். நதி நீர் விவகாரங்களை இந்த அமைப்பு கையாள வேண்டும். நாட்டில் நீர் வளம் உபரியாக உள்ள பகுதிகளைப் பட்டியலிட்டு, அங்குள்ள நீர் வளத்தை, தேவைப்படும் பிற பகுதிகளுக்குப் பிரித்து வழங்கி நிர்வகிக்கும் அதிகாரத்தை இந்த அமைப்புக்கு வழங்கும்படி நீர் வளப் பயன்பாட்டுச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும். இது பொதுவான தீர்வு.
ஏடுகள் பலமாக ஆரூடம் சொல்லிக்கொண்டு இருந்த நிலையில், 1996 மார்ச் 8-ம் நாள், பிற்பகல் 2.30 மணி முதல் 6.00 மணி வரை அவரிடம் நான் தனியாக உரையாடினேன். 'நீங்கள் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்குவதாக இருந்தால் வரவேற்கிறேன். ஆனால், உங்கள் பெயரை வேறு சிலர் தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்துவது சரி அல்ல. எங்கள் இயக்கத்திலும், வேறு பல இயக்கங்களிலும் உங்கள் ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே, ஒரு சிலரின் சுயநல அரசியலுக்கு உங்கள் பெயரைப் பயன் படுத்த அனுமதிக்காதீர்கள்’ என்றேன்.
''ஜெயலலிதா அவராகவே முடிவு எடுத்து, அவராகவே செயல்படுகின்றார். பிறரது யோசனைகளை எல்லாம் கேட்டு அதன்படி முடிவு எடுக்கும் இயல்பு, அவரிடம் இல்லை. சோ, தன்னுடைய ஆலோசனைகளை முடிந்த மட்டும் சொல்லிப்பார்க்கிறார். ஆனால், அந்த யோசனைகள் எல்லாமே நல்லவை என்றும் சொல்ல முடியாது. சட்டமன்றத் தேர்தலின்போது, கூட்டணிக் கட்சிகள் கேட்டு இருந்த இடங்களையும் சேர்த்து, 160 தொகுதிகளுக்கு அண்ணா தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்தபோது, அது ஜெயலலிதா எடுத்த முடிவு அல்ல என்றும் மற்றவர்கள்தாம் காரணம் என்றும் சிலர் சப்பைக்கட்டுக் கட்டினார்கள்.
இரண்டாவது நடைப்பயணம்:
''மம்தா பானர்ஜி, மாயாவதி, ஜெயலலிதா, அரசியல் செயல்பாடுகளை ஒப்பிடுங் கள்..?''
எம்.பார்வதி, சுவாமிமலை.
''தி.மு.கழகத்தில் அடங்காப் பற்றும் தணியா வேட்கையும் கொண்டவனாக இயங்கிய காலத்தில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை நெஞ்சிலே போற்றியது உண்டு. தி.மு.கழகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி அவரை வெளியேற்றியபோது, கட்சிக்கும் தலைமைக்கும் நான் கொண்டு இருந்த விசுவாசத்தின் காரணமாக, எம்.ஜி.ஆர். அவர்களை எதிர்த்து மேடைகளில் விமர்சித்தேன். கடுமையாக விமர்சித்துவிட்டு மேடையை விட்டுக் கீழே இறங்கி காரில் ஏறினால், அவரது 'நாடோடி மன்னன்’, 'மன்னாதி மன்னன்’ பாடல்கள்தாம் இரவு முழுக்கப் பயணத்தில் ஒலித்துக்கொண்டு இருக்கும். 'நாடோடி மன்னன்’, 'மதுரை வீரன்’, 'தாய்க்குப் பின் தாரம்’, 'எங்க வீட்டுப் பிள்ளை’ படங்களை எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது!
சின்ன வயதிலேயே மனனம் செய்தவைதான், பசுமரத்து ஆணியாகப் பதிந்துவிட்டது. நடு வயதில் மனனம் செய்ததை, அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்ளாவிட்டால், மறந்துபோகும்!''
98 நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க-வோடு உடன்பாடு வைத்துக்கொண்டது சரியான முடிவுதான். ஆனால், 2006 சட்டமன்றத் தேர்தலின்போது, எங்கள் இயக்கத்தில் 90 விழுக்காட்டினர் தி.மு.க-வோடு உடன்பாடு வேண்டாம் என்று வெறுக்கின்ற சூழ்நிலையை தி.மு.க-தான் ஏற்படுத்தியது. எனவே, என் மனதில் விருப்பம் இன்றியே, அ.தி.மு.க-வோடு உடன்பாடு வைத்துக்கொள்ள நேர்ந்தது. ஆனால், பணத்துக்காகக் கூட்டணிவைத்தேன் என்று அபாண்டமான பழியும் தூற்றலும் என் மீது வீசப்பட்டது.
''ஈழத் தமிழர் இனப் படுகொலை நடத்திட, சிங்கள அரசுக்கு ஆயிரமாயிரம் கோடிப் பணத்தையும், சக்திவாய்ந்த ஆயுதங்களையும் வழங்கியதோடு, நிலத்திலும், கடலிலும், வான்வெளியிலும் சிங்களவனின் முப்படைகள், விடுதலைப் புலிகளை யுத்த காலத்தில் வீழ்த்துவதற்குத் திட்டங்களை வகுத்துக்கொடுத்தது இந்தியா. அத்துடன் சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, இஸ்ரேல், இரான் ஆகிய அணு ஆயுத நாடுகளின் அபரிமிதமான ஆயுத உதவிகளும்தான் யுத்த களத்தில் விடு தலைப் புலிகளின் தோல்விக்குக் காரணம் ஆகும்.
''சென்னை வீட்டில், திருவள்ளுவர் படம், தந்தை பெரியார் படம், அறிஞர் அண்ணா படம்; தி.மு..க-வில் இருந்து என் மீது கொலைப் பழி சுமத்தி நீக்கப்பட்ட போது, அதை எதிர்த்துத் தீக்குளித்து மடிந்த தி.மு.கழகக் கண்மணிகளாம் நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், மேலப் பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை காமராசபுரம் பாலன் ஆகிய ஐவரின் படங்கள்; 89-ல், வன்னிக் காடுகளுக்குச் சென்று, மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களைச் சந்தித்துத் திரும்பியபோது, இந்திய ராணுவத்தினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரால் சுற்றி வளைக்கப்பட்டு நாங்கள் தாக்கப்பட்டபோது, என் உயிரைக் காப்பதற்காகப் படகைச் செலுத்த முனைந்து, ராணு வத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சரத் என்ற பீட்டர் கென்னடியின் படம் ஆகிய வற்றைத்தான் வரவேற்பு அறையில் வைத்து இருக்கிறேன்.
எல்.கருப்பசாமி, விருதுநகர்.
இரண்டாவது மகள் கண்ணகி, மருமகன் ஜான் புஷ்பராஜ், அமெரிக்காவில் சிகாகோவில் வசிக்கின்றனர். மருமகன், தனியார் கணினி நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணிபுரிகின்றார். என் பிள்ளைகள் மூவருமே நன்கு படித்துப் பட்டம் பெற்றவர்கள்!''
பி.மாரி, தஞ்சாவூர்.
மு.இளவரசு, காஞ்சிபுரம்.
இறந்துபோன தாய்க்குக் கல்லறை கட்டுவதற்குக்கூட வசதி அற்ற நிலையில், உடல் உழைப்பாலும் கடுமையான முயற்சிகளாலும் படித்து முன்னேறி, வழக்கறிஞராகி, ஓர் அரசியல் இயக்கத்தில் சேர்ந்து, தொடர்ந்து தோல்விகளையே சந்தித்தபோதிலும், தன் பேச்சாற்றலால், சத்திய வேட்கையால், அறம் சார்ந்த அரசியலால், அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பு ஏற்றார்.