Sunday, June 4, 2017

இயற்கை மஞ்சள் தூள் விற்பனைக்கு..

நாங்கள்  விளைவிக்கும் மஞ்சளில் இருந்து வீட்டிற்கு தேவையான அளவு எடுத்து வைத்துக்கொண்டு அதனை பொடியாக்கி சமையலுக்கு பயன்படுத்திக்கொள்வோம்.

இதனை முடிந்தவரை மற்றவர்களுக்கும் சென்று சேர்க்க விரும்புகிறோம்.

இப்போது எங்களிடம் செல்பாஸ் வைக்காத இயற்கை உரம் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட  மஞ்சள் உள்ளது.

மஞ்சள்தூள் தேவைப்படுபவர்களுக்கு அரைத்து கொடுக்கப்படும்.



Contact:

land2urhand@gmail.com

மஞ்சள் தூளில் - செல்பாஸ் எனும் விஷம்

மஞ்சளை தினமும் சேர்த்தால் புற்று நோயை கட்டுப்படுத்தும் என்பார்கள். ஆனால் இன்றைய மஞ்சள் பொடியை உண்பதால் அதுவே புற்று நோய் வருவதுற்கு காரணமாகிறது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், மஞ்சள் கெடாமல் இருப்பதற்கு செல்பாஸ் எனும் மாத்திரை உபயோகப்படுத்தப்படுகிறது.

மஞ்சள் பதப்படுத்தும் முறை

1. வெட்டி எடுத்த மஞ்சள் வேக வைக்கப்படும்
2. பின்னர் வெயிலில் உலர வைக்கப்படும்
3. உலர்ந்த மஞ்சளை சுற்றி உள்ள வேர்கள் நீக்கப்படும் (பாலிஷ்)
4. விலை கிடைக்கும் வரை மூட்டையில் தைத்து அடுக்கி வைக்கப்படும்

இவ்வாறு வேர்கள் நீக்கப்பட்டு மஞ்சள் அதிக நாட்கள் கெடாமல் இருக்க செல்பாஸ் மாத்திரையை வைத்து அடுக்கி விடுவார்கள்.

இந்த மாத்திரை ஒரு விஷமாகும். இவ்வாறு சேமிக்கப்பட்ட மஞ்சள்தான் பொடியாக்கப்பட்டு கண் கவரும் படி விற்கப்படுகிறது.

Reference

http://shanthisa.blogspot.in/2016/03/about-turmeric.html



Sunday, November 6, 2016

டேர்ம் இன்ஷூரன்ஸ் - உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் ஸ்மார்ட் வழி!

- Vikatan Article

ங்களைச் சார்ந்து இருப்பவர்களின் நன்மைக்கும், நீண்ட கால நிதி நலனுக்கும் உங்களுக்கு ஆயுள் காப்பீடு அவசியமாகிறது. பொதுவான  ஆயுள் காப்பீடு என்பதற்குப் பதிலாக உங்களைப் பாதுகாக்க சரியான இன்ஷூரன்ஸைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.
நீங்கள் எவ்வளவுதான் சம்பாதித்தாலும், வாழ்க்கையில் எதிர்பாராத விஷயங்கள் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆகையால், லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது அவசியமாகிறது.
    
கடந்த காலங்களில் லைஃப் இன்ஷூரன்ஸ் என்பது பாதுகாப்புக்கு மட்டுமல்லாது முதலீடாகவும், வரிச் சேமிப்பாகவும் பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இன்ஷூரன்ஸை முதலீடாகப் பார்ப்பது குறைந்து, பாதுகாப்புக்கு மட்டுமே உகந்தவையாக மாறிவருவது ஆரோக்கியமான மாற்றம் என்றே சொல்லவேண்டும்.  

காப்பீடு செய்யும்போது காப்பீட்டின் முடிவில் முதிர்வுத் தொகையாக எவ்வளவு பணம் திரும்பக் கிடைக்கும் என்றே பலர் பார்க்கிறார்கள். இது தவறான அணுகுமுறை. டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது பாலிசிதாரர்கள் எதிர்பாராத விதமாக மரணமடைந்து விட்டால் அதில் இருந்து அவர்களது குடும்பத்தைப் பாதுகாக்க உதவுகிறது.    

லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை இரண்டு வகைகளாக எடுத்துக்கொள்ளலாம்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் பிளான்: இன்ஷூரன்ஸ் திட்டங்களிலேயே மிகவும் சிறந்த திட்டமாக டேர்ம் இன்ஷூரன்ஸை எடுத்துக்கொள்ளலாம். இந்தத் திட்டங்கள் 10, 15, 25 மற்றும் 30 வருடங்களைக் கொண்டிருக்கின்றன. பிரீமியம் மிகவும் குறைவு. செலுத்தும் பிரீமியத்துக்கு வருமான வரி விலக்கு (80சி) உண்டு. இன்ஷூரன்ஸ் திட்டக் காலத்தில் பாலிசிதாரர் இறந்துவிட்டால் அவரது குடும்பத்துக்கு முழுக் காப்பீடுத் தொகையும் கிடைக்கும். பாலிசிதாரருக்கு எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாதபட்சத்தில் எந்த விதமான சரண்டர் மதிப்பும், முதிர்வுத் தொகையும் கிடைக்காது.
எண்டோவ்மென்ட் பிளான் : இந்தத் திட்டம் பாதுகாப்பு மற்றும் முதலீடு இரண்டையும் உள்ளடக்கிய வகையில் அமைந்திருக்கிறது. இதில் செலுத்தப்படும் பிரிமீயம் தொகையில் ஒரு பகுதி உயிர் பாதுகாப்புக்கும், மற்றொரு பகுதி முதலீட்டுக்குச் செல்லும் வகையில் அமைந்திருக்கும். இதனால்  டேர்ம் பாலிசியைவிட எண்டோவ்மென்ட் பாலிசியின் பிரிமீயம் அதிகமாக இருக்கும். எண்டோவ்மென்ட் பாலிசி எடுக்கும்போது குறிப்பிட்ட இடைவெளியில் போனஸ் தொகையும், முடிவில் முதிர்வுத் தொகையுடன் போனஸ் தொகையும் வழங்கப்படும். 
    
டேர்ம் பாலிசியில் பிரிமீயம் மிகவும் குறைவு என்பதால், டேர்ம் பாலிசி எடுத்துவிட்டு இதர முதலீட்டு வாய்ப்புகளில் அதிகளவில் முதலீடு செய்யலாம்.      
இதனை ஓர் உதாரணத்துடன் பார்ப்போம். ராம்குமார் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவருக்கு வயது 35.  புகைப்பிடித்தல், பான் பராக் மெல்லுதல் போன்ற பழக்கம் இல்லாதவர். ஆண்டு வருமானம் 5 லட்ச ரூபாய். குடும்பச் செலவினங்கள் போக ஆண்டுக்கு 1,50,000 ரூபாய் முதலீட்டுக்காக ஒதுக்கீடு செய்கிறார். 

இவருடைய வருமானத்துக்கு ஒரு கோடி ரூபாய் வரை டேர்ம் பாலிசி எடுக்கலாம். ஆனால், அவர் 25 லட்சம் ரூபாய்க்கு பாலிசி எடுக்கிறார் என  வைத்துக் கொள்வோம். இதற்கான பிரிமீயத் தொகை 3,500 ரூபாயில் இருந்து 6,000 ரூபாய் வரை உள்ளது. இவர் 5,000 ரூபாய் பிரிமீயம் செலுத்துவதாகவும் மீதமுள்ள 1,45,000 ரூபாயை இதரத் திட்டங்களில் முதலீடு செய்வதாகவும் வைத்துக்கொள்வோம். 

அடுத்துவரும் 25 வருடத்தில் அவர் பிரிமீயமாக செலுத்துவது 1,25,000 ரூபாய் மட்டுமே. ஆண்டுக்கு 1,45,000 ரூபாயை இதரத் திட்டங்களில் முதலீடு செய்யும்போது குறைந்தபட்ச வருமானமாக வரிக்குப் பிந்தைய நிலையில் 8% வருமானம் என்ற வகையில் எடுத்துக்கொண்டால், 25 வருட  இறுதியில் 60 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
ஒருவேளை ராம்குமார் எண்டோவ்மென்ட் பாலிசியைத் தேர்ந்தெடுத்தால், அவர் ஆண்டுக்கு 1,16,000 ரூபாய் பிரிமீயம் செலுத்த வேண்டி இருக்கும். மீதமுள்ள 34,000 ரூபாய் மட்டுமே இதர வகையில் முதலீடு செய்ய முடியும். 25 வருடத்தில் பிரிமீயமாக செலுத்துவது 29 லட்ச ரூபாய். முதிர்வுத் தொகையாக 40 லட்ச  ரூபாய் வரை கிடைக்கும். இதனுடன் 34,000 ரூபாயை இதர வகையில் 25 வருடம் முதலீடு செய்யும்போது அது 8% வருமானம் கிடைத்தால், 14 லட்ச ரூபாய் கிடைக்கும். ஆக மொத்தத்தில், 54 லட்ச ரூபாய் மட்டுமே கிடைக்கும். 

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம், டேர்ம் பாலிசியில் குறைந்த பாலிசித் தொகையைச் செலுத்தி, இதர வகையில் அதிக அளவில் முதலீடு செய்து அதிக வருமானம் பெறலாம் என்பதே. இங்கே முதலீட்டு மீதான வருமானம் 8% என குறைவாக கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலத்தில் பல ஈக்விட்டி மற்றும் பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகள் ஆண்டுக்கு சர்வ சாதாரணமாக 15%-க்கு மேல் வருமானம் தருகின்றன. அந்த வகையில், டேர்ம் பிளான் எடுத்துவிட்டு, பிறவற்றில் முதலீடு செய்யும்போது எண்டோவ்மென்ட் பிளானைவிட அதிக வருமானம் கிடைக்கும்.    
    
ஆக, உங்களுக்குத் தேவையான, நல்ல காப்பீட்டுத் திட்டங்களைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்புக்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்கும் கடமையிலிருந்து ஒருபோதும் தவறாதீர்கள்! 
    
தொகுப்பு: ஞா.சக்திவேல் முருகன்

Friday, October 7, 2016

மிஸ்டர் கழுகு : ஹெல்த் என்னதான் ஆச்சு? - அப்போலோ காட்சிகள்..

- Junior vikan article.. thanks to vikatan

ம் முன் வந்தமர்ந்த கழுகார் மீது ஆஸ்பத்திரி வாசனை. ‘‘இரண்டு நாட்களாக தூக்கமே இல்லை என்றவருக்கு பகோடாவையும் லெமன் டீயையும் நீட்டினோம்.

``இப்போது எப்படி இருக்கிறார்?’’ என்றோம்.

லெமன் டீயை உறிஞ்சியபடி பேச ஆரம்பித்தார், கழுகார். ‘‘கடந்த வாரத்தில் நடந்த பல சம்பவங்கள், அப்போலோ மருத்துவமனைக்குள் நடப்பது, அதையொட்டி மீண்டும் ஆதிக்கத்துக்கு வந்த மன்னார்குடி குடும்பம், அ.தி.மு.க-வில் முற்றிலுமாக ஓரம்கட்டி வைக்கப்பட்டுள்ள மூத்த அமைச்சர்கள், சசிகலாவின் கண் அசைவில் செயல்படும் அதிகாரிகள், நீதிமன்றத்தின் வாயை அடைப்பதற்காக எய்ம்ஸ் டாக்டர்களை வரவழைத்தது, இவற்றை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் அளவு அதிகமானது என்று புரிந்துகொள்ள முடியும்.’’

‘‘ஓ! இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா?’’
‘‘ஆம். முதலமைச்சர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2 வாரங்கள் ஓடிவிட்டன. ஆரம்பத்தில், முதலமைச்​சருக்குக் காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைவால் ஏற்பட்ட உடல்சோர்வு என்றுதான் மருத்துவமனை நிர்வாகம் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால்,  மருத்துவமனை நிர்வாகமே இறங்கிவந்து, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்றுப் பிரச்னை என்று சொல்லும் அளவுக்கு அதன் அறிக்கைகள் மாறி உள்ளன. அதையும் தாண்டி, முதலமைச்சருக்குத் தீவிரமான உடல்நலப் பிரச்னைகள் இருக்கின்றன என்பதை, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெல் வருகை உணர்த்தியது. அக்டோபர் 2-ம் தேதி லண்டன் சென்ற அவர், ‘முதலமைச்சரின் உடல்நலத்தில் சில குறிப்பிட்ட முன்னேற்றங்கள் இருந்தால் தனக்கு தகவல் தாருங்கள்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்!”

‘‘தகவல் தந்தார்களா?”

“அக்டோபர் 4-ம் தேதி  முதல்வர் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், அன்று மாலையே மீண்டும் அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் குறைந்துவிட்டதாம். அதேநிலைதான் இப்போதுவரை நீடிக்கிறது. இப்போது எய்ம்ஸ் மருத்துவர்கள் மூன்று பேர் வந்து இறங்கிவிட்டார்கள். டாக்டர் ரிச்சர்ட் பியெல் அனுப்பிய இன்னொரு டாக்டரும்  லண்டனில் இருந்து வந்துள்ளாராம்.”
‘‘டாக்டர்கள் ஏன் இப்படி படை எடுக்கிறார்கள்?”

‘‘விஷயம் அவ்வளவு சீரியஸ். அதனால்தான். கடந்த 5-ம் தேதி, சென்னை அப்போலோ

மருத்து​வமனைக்கு எய்ம்ஸ் டாக்டர்கள் வந்தனர். அவர்களில் டாக்டர் கில்நானி, நுரையீரல் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர். மற்றொரு டாக்டர் அஞ்சன் டிரிக்கா, மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர். இவர்களுடன் இதயநோய் சிறப்பு மருத்துவர் நிதிஷ்நாயக்கும் வந்துள்ளார். அவர்கள் முதலமைச்சரின் உடல்​நிலையைப் பரிசோதித்து அவருக்கான சிகிச்சைகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். சிறுநீரகம், நுரையீரல், இதயம் ஆகிய மூன்று உறுப்புகளிலும் முதல்வருக்கு சிறப்புக் கவனம் தேவைப்படுகிறதாம். இந்த மூன்று உறுப்புகளின் செயல்பாடுகள் கூடியும் குறைந்தும் வருகின்றனவாம். அதனால்தான் மருத்துவர்களாலேயே ஒரு முடிவுக்கு வர முடியவில்லையாம். ‘எக்மோ’ முறைப்படி நுரையீரல் இயக்கப்பட்டு வருகிறது. அதில் முன்னேற்றம் இருக்கும்போது மட்டும் உடல் முன்னேற்றம் இருக்கிறதாம். இதனால்தான் இந்தியாவின் பிரபல மருத்துவ நிபுணர்களை அழைக்கிறார்கள். ஆலோசனைகள் கேட்கிறார்கள்.’’

‘‘அப்படியா?”
‘‘லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெல் சிகிச்சையைத்தாண்டி, தற்போது எய்ம்ஸ் டாக்டர்களை வரவழைக்க வேண்டிய நோக்கம் முதலமைச்சரின் உடல்நிலை மட்டுமல்ல, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்தும் மிக முக்கியமான காரணம். சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று டிராஃபிக் ராமசாமி, கடந்த 3-ம் தேதி நீதிபதிகளிடம் முறையிட்டார். அப்போது, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் சில கருத்துக்களைத் தெரிவித்தனர். அதில், ‘முதலமைச்சரின் உடல்நிலை பற்றி வெளிப்படையாகப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை, அரசாங்கத்துக்கு இருக்கிறது’ என்று குறிப்பிட்டனர். இதையடுத்து, அரசாங்கத்தின் மேல்மட்டத்தில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. டிராஃபிக் ராமசாமியின் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் டிஸ்மிஸ் ஆனாலும்கூட, இந்த விவகாரத்தை யாராவது உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துப்போக வாய்ப்புள்ளது. அப்படிப் போகும்போது, உச்ச நீதிமன்றம், திடீரென, ஒரு சிறப்பு மருத்துவர் குழுவைப்போட்டு முதலமைச்சர் உடல்நிலையைப் பரிசோதித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கலாம். அப்படி நடந்தால், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களைத்தான் நாடவேண்டும். இதில் இருந்து தப்புவதற்காகவே, அப்போலோ மருத்துவமனையும், அரசாங்கமும் முன்கூட்டியே எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களை அழைத்துவிட்டது என்றும் சொல்லப்படுகிறது.

‘‘சசிகலா தரப்பினர் ரியாக்‌ஷன் எப்படி இருக்கிறது?”

‘‘சசிகலா மருத்துவமனையில் இருக்கிறார்.
அ.தி.மு.க என்ற மிகப் பெரிய கட்சியும், அதன் அரசியல் நடவடிக்கைகளும் தற்போது சசிகலா குடும்பத்தின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. யாரெல்லாம் வேண்டாம் என்று ஜெயலலிதா துரத்திவிட்டாரோ, அவர்கள் எல்லாம் தற்போது அப்போலோ மருத்துவமனைக்குள் அடைக்கலமாகிவிட்டனர். திவாகரன்,

டி.டி.வி.தினகரன், மகாதேவன், டாக்டர் வெங்கடேஷ் என்று எல்லோரும் இப்்போது போயஸ் கார்டன் வேதா நிலையத்துக்கும் அப்போலோ மருத்துவமனைக்கும் அலைந்து கொண்டிருக்கின்றனர். கொங்கு மண்டலத்தில் இன்னும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ராவணன்கூட அப்போலோ மருத்துவமனைக்கு வந்துவிட்டுச் சென்றார்.

எம். நடராஜன் வீடும் பரபரப்பாக இருக்கிறது. பின்னால் இருந்து அனைத்து வேலைகளையும் நடராஜன் செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறார். எனவே, இப்போது அவர்களின் கட்டுப்பாட்டில்தான் முழுமையாக போயஸ் கார்டன், அப்போலோ மருத்துவமனை மற்றும் அ.தி.மு.க இருக்கிறது. இப்படி அ.தி.மு.க-விலும், ஆட்சி நிர்வாகத்திலும் சசிகலாவின் ஆதிக்கம் வலுப்பெற்று வருகிறது!”

‘‘சீனியர்ஸ் ரியாக்‌ஷன்?”
‘‘முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அ.தி.மு.க-வின் மூத்த அமைச்சர்கள் அனைவரும் சத்தமில்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு எந்த வேலையும் இல்லை. அதற்கு உதாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று மத்திய அரசு சொன்னதற்கு, நம்முடைய அமைச்சர்கள் தரப்பில் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை.  மத்திய நீர்வளத்துறை செயலாளர் சஷி சேகருக்கு, தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ்தான் கடிதம் எழுதி உள்ளார். ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது’ என்று பிரதமர் சொல்வதும், காவிரி விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சரும் அமைச்சர்களும் நடந்துகொள்ளும் விதமும் அந்தப் பிரச்னை முழுமையாக அரசியல்மயமாகிவிட்டது என்பதற்கு உதாரணம். இந்த நேரத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று மத்திய அரசு சொல்லி உள்ளதற்கு, எதிர்வினை ஆற்ற வேண்டிய பொறுப்பு மாநில முதலமைச்சர் அல்லது பொறுப்பு முதலமைச்சர் அல்லது மூத்த அமைச்சருக்குத்தான் உண்டு. ஆனால், இங்கு மூத்த அமைச்சர்கள் யாரும் அந்த விவகாரத்தில் வாய் திறக்கவில்லை. அவர்களை சசிகலா குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை என்பதுதான் காரணம். பிரதமரின் கருத்துக்கு எதிர்வினையை ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளர் சொல்வது பொருத்தமானது அல்ல என்பது சசிகலாவுக்குத் தெரியுமோ, தெரியாதோ ஆனால், அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணனுக்கும் சாந்த ஷீலா நாயருக்கும் தெரியும். அவர்கள் சொல்லி இருக்க வேண்டும்!’’

‘‘ம்ம்ம்... சிறுதாவூர் பங்களாவில் கொஞ்சம் சலசலப்பு தெரிகிறதாமே?’’
‘‘முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களாவிலும், சிறப்பு மருத்துவ வசதிகளுடன் சில  ஏற்பாடுகள் நடக்கின்றன. அப்போலோ மருத்துவமனையில் இருந்து ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆகும்போது, ஒருவேளை சிறுதாவூரில் ஓய்வெடுக்கலாம் என்பதற்காக இந்த ஏற்பாடுகளாம்’’ எனச் சொல்லிவிட்டு எழுந்த கழுகார்,
‘‘கடந்த செப்டம்பர் 30-ம் தேதி, சென்னையில் அப்போலோ மருத்துவமனை குழுமங்களின் தலைவர் பிரதாப் ரெட்டியின் வீட்டில் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதாப் ரெட்டியின் மகள் பிரீத்தா ரெட்டி - விஜயகுமார் ரெட்டி தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். அவருடைய திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது. வி.வி.ஐ.பி-க்கள் சுமார் 70 பேர் மட்டும் கலந்துகொண்ட நிகழ்ச்சி அது. அதில், டெல்லியில் இருந்து வந்திருந்த இரண்டு ஊடக அதிபர்களும் கலந்துகொண்டனர். ‘முதலமைச்சரின் உடல்நிலை மிக மோசமான நிலையில்தான் இருக்கிறது. செயற்கை சுவாசத்தில் இருந்து இன்னும் அவரை விடுவிக்க முடியவில்லை. ஆனால், அரசாங்கம் அதை மறைத்து, முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார் என்று அறிக்கை கொடுக்கிறது. அதையும் மருத்துவமனை லெட்டர்பேடில் அவர்களே எழுதிவிடுகின்றனர்’ என்ற புலம்பல் கேட்டதாம். இது அந்த மருத்துவமனை மீதான நம்பிக்கையை கொஞ்சம் குறைத்துள்ளதாம். அதனைச் சரி செய்வதற்காகத்தான் நாளிதழ்களில் அப்போலோ நிர்வாகம் விளம்பரம்  கொடுத்துள்ளது” என்ற கழுகார், வாட்ஸ்அப்பில் வந்த அப்போலோ அறிக்கையைப் படித்துவிட்டு படபடப்புடன் நிமிர்ந்தார். “முதல்வருக்கு சர்க்கரை நோய், மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவற்றுக்கான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. செயற்கை சுவாசமும், இதர சிகிச்சைகளும் தொடர்கின்றன. சில நாட்களில் வீடு திரும்புவார் என இதுவரை சொல்லிவந்த அப்போலோ, இப்போது முதன்முறையாக, மருத்துவமனையில் நீண்டகாலம் இருந்து முதல்வர் சிகிச்சை பெறவேண்டும் எனச் சொல்லியிருக்கிறது” என்றபடி பறந்தார் கழுகார்.
படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன், ஆ.முத்துகுமார், பா.காளிமுத்து, பா.சரவணகுமார், மீ.நிவேதன், தே.அசோக்குமார்,  உ.கிரண்குமார்.அட்டை ஓவியம்: பிரேம் டாவின்ஸி

Monday, August 22, 2016

அனைத்துக்கும் கட்டணம்... அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் வங்கிகள்!

- vikatan article

அனைத்துக்கும் கட்டணம்... அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் வங்கிகள்!

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

ம் நாட்டில் தனியார் வங்கிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அவர்கள் கடைப்பிடிக்கும் நடைமுறைகளை அடுத்த  சில  மாதங்களில் பொதுத் துறை வங்கிகளும் பின்பற்றத் தொடங்கிவிடுகின்றன. இதனால் பாதிக்கப்படுவது என்னவோ அப்பாவி மக்கள்தான். ஒரு சின்ன உதாரணத்தைப் பார்ப்போம்.

பணம் தர மறுத்தாலும் கட்டணம்!

உங்கள் வங்கிச் சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கும் என உங்களுக்குத் துல்லியமாகத் தெரியாது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் சுமாராக ரூ.1,000-க்கு மேல் இருக்கும் என நினைக்கிறீர்கள். உங்களது அவசரத் தேவைக்கு ரூ.1,000 தேவை. எனவே,  நீங்கள் ஏடிஎம் மெஷினில் கார்டை நுழைத்து, ரூ.1,000 எடுக்க முயற்சிக்கிறீர்கள். ஆனால், உங்கள் கணக்கில் ரூ.990-தான் உள்ளது. எனவே, நீங்கள் கேட்ட தொகை இல்லை என ஏடிஎம் மெஷின் பணம் தர மறுத்துவிடுகிறது. உடனடியாக உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.25 சர்வீஸ் கட்டணமாகக் கழிக்கப்படுகிறது. இதற்குப் பெயர், ஏடிஎம் டினையல் ஃபீ (ATM Denial Fee). அதாவது, ஏடிஎம் மெஷின் உங்கள் கணக்கில் பணம் இல்லை என உங்களுக்குத்  தெரிவிப்பதற்கான கட்டணம். உங்களுக்குத் தேவையான பணம் கிடைக்காததுடன், கூடுதலாக ரூ.25-யை நீங்கள் இழந்ததுதான் மிச்சம். 

வட்டி வருமானமும் இதர வருமானமும்!

வங்கிகளின் வருமானத்தை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று, வட்டி வருமானம்; மற்றொன்று, இதர வருமானம். இந்த இதர வருமானத்தில் கமிஷன், புரோக்கரேஜ், டிரஷரி, வங்கி செய்துள்ள முதலீடு மீதான டிவிடெண்ட் என பல வருமானங்கள் அடங்கும். சாதாரண வாடிக்கையாளர்       களிடமிருந்து வசூலிக்கப்படும் பலவகையான கட்டணங்கள், அபராதங்கள் போன்றவை இந்த இதர வருமானத்தில்தான் அடங்கும்.
 
இந்த இதர வருமானம்  (other income)அனைத்து வங்கிகளுக்கும் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது. இதிலிருந்து பலவகையான வாராக் கடன் பிரச்னைகளை சமாளிக்கவும், லாபத்தை உயர்த்தவும் சுலபமான வழியை நமது வங்கிகள் கண்டுபிடித்து விட்டன என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. 

வாராக் கடனை விரட்டி வாங்குவதைவிட, அப்பாவி மக்களிடமிருந்து பிடுங்குவது எளிதான விஷயமாச்சே! அதுவும் வாடிக்கையாளர்களிடமிருந்து ஆட்டோமேட்டிக்காக கழிக்கப் படும் பணம் என்பதால் கச்சித மாக வந்துவிடும் என்கிற காரணத் தால் இதன் மீது வங்கிகளுக்கு கூடுதல் மோகம்.

எதற்கெடுத்தாலும் கட்டணம்!

தொழில்நுட்பங்கள் வளர வளர கட்டணங்கள் குறையும்; போட்டி அதிகமானாலும் கட்டணங்கள் குறையும் என்பது உலகம் முழுக்க பொதுவான விதி முறை.  ஆனால், இந்த விதிக்கு வங்கிச் சேவைகள் மட்டும் விலக்கு. வங்கிச் சேவையில் முன்பு இல்லாத அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. இந்தத் தொழில்நுட்பம் வளர்ந்த வேகத்தைவிட அதற்காக வசூலிக்கப்படும் கட்டணங்கள் பல மடங்கு வேகமாக உயர்ந்துள்ளது. 

பணம் எடுத்தால் சேவைக் கட்டணம், ஒரு மாதத்துக்கு இத்தனை தடவைக்கு மேல் பேலன்ஸ் தொகையை விசாரித்தால் சேவைக் கட்டணம், பணம் இல்லை என்று மெஷின் சொன்னால் சேவைக் கட்டணம், ஏடிஎம் மெஷினில் போதுமான அளவு பணம் இல்லாமல் மெஷின் பணம் கொடுக்க மறுத்தாலும் சேவைக் கட்டணம் என வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொழிக்கின்றன நமது வங்கிகள். வங்கியின் நேரடித் தொழிலான கடன் கொடுத்து வட்டி ஈட்டுவதில் போட்டிகள் அதிகமானவுடன், தங்களின் லாபத்தைக் கூட்டுவதற்கு வங்கிகள் அனைத்தும் இதர வருமானத்தை அதிகமாக்கிக் கொண்டே செல்கின்றன. 

ஆன்லைனில் வசூல் வேட்டை!

‘வாடிக்கையாளர்கள் யாரும் வங்கிக் கிளைக்கு வரவேண்டாம். அவ்வாறு வந்தால் எங்கள் அதிகாரிகளின் நேரம் வீணாகிறது. நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே  வங்கிச் சேவைகளைப் பெறுங்கள்’ என ஆன்லைன் சேவைகளை அறிமுகப்படுத்தின வங்கிகள். வாடிக்கையாளர்கள் தொடக்கத் தில் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் மெதுவாக இந்த ஆன்லைன் சேவைகளைப் பெறத் தொடங் கினர். ஆன்லைனில் சேவை களைப் பெறுவதற்காக, அலுவ லகத்தில்/ தொழில் செய்யும் இடத்தில், வீட்டில், மொபைல் போனில் என இன்டெர்நெட் வசதிகளைப் பெற்று, அதற்கு தனியாக மாதாமாதம் ஆயிரக் கணக்கில் பில் செலுத்த ஆரம்பித்தனர். 

முன்பு இலவசமாக இருந்த  இந்த ஆன்லைன் சேவைகளுக்கு வங்கிகள் இப்போது சேவைக் கட்டணத்தை அறிமுகப்படுத்தி இருக்கின்றன. ஆன்லைனில் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்தால் பணம், ஸ்டேட்மென்ட் வாங்கினால் பணம் என அந்த டிவிஷனும் இப்போது பணம் சம்பாதிக்கும் எந்திரமாக மாறிவிட்டது. இன்னும் சில நாட்களில் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் பாவப்பட்ட ஜென்மங்கள் என்ற நிலைக்கு வங்கிகள் எடுத்துக்கொண்டு சென்றுவிடுமோ என்னவோ! 

நாம் காசோலையை ஒரு வருக்கு கொடுத்தால், அவர் கலெக்‌ஷன் போடுவார். அந்தக் காசோலை மூலம் இன்னொருவரின் கணக்குக்கு பணத்தை மாற்றுவதற்கு வங்கிகள் நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கும். அவ்வாறு செய்வதற்கு வங்கிகள் எவ்வித சேவைக் கட்டணமும் வசூலிப்பதில்லை. ஆனால், ஆன்லைனில் டிரான்ஸ்ஃபர் செய்வதற்கு ஏன் அதிகப்படியான சேவைக் கட்டணத்தை வசூல் செய்கின்றன என்பது புரியாத புதிர். 

உள்ளபடி பார்த்தால், ஆன்லைனில் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்வதன் மூலம் வங்கிக்கு ஆகும் செலவு குறைந்து,  லாபம் கூடுகிறது. நம் வங்கிகளுக்கு டபுள் லாபம் என்பது மிகவும் பிடித்த விஷயமாயிற்றே! ஆன்லைன் டிரான்ஸ்ஃபருக்கான கட்டணத்தை  வசூலித்துவிடுகிறது.

நமது  ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் ரொக்கப் பரிவர்த்தனை களைக் குறைத்து, ஆன்லைனில் பரிவர்த்தனைகளை அதிகமாக்க வேண்டும் என்று முயற்சித்து வருகின்றன. ஆனால், வங்கிகள் வாங்கும் பணப் பரிவர்த்தனைக் கட்டணங்கள் அதை பிரதிபலித்த மாதிரி தெரியவில்லை. பல வளர்ந்த நாடுகளில் இந்தச் சேவைகள் அனைத்தும் இலவச மாக வழங்கப்பட்டு வருகின்றன.

மினிமம் பேலன்ஸ் கொள்ளை!

வங்கிகள் பெரிய அளவில் சம்பாதிக்கும் இன்னொரு விஷயம், மினிமம் பேலன்ஸ் சார்ஜ். பெருநகரங்களில் வசிப்பவர்கள் பல தனியார் முன்னணி வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டுமென்றால், குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.10,000 வைத்திருக்க வேண்டும். பல பொதுத் துறை வங்கிகளில் இது ரூ.1,000-ஆக உள்ளது.  வங்கிகள் குறிப்பிடும்  தொகையைக் கணக்கில் வைத்திருக்காவிட்டால், 750 ரூபாயை அபராதக் கட்டணமாக வங்கிகள் பிடித்தன. பல மாதங் களுக்கு பேலன்ஸ் தொகையை முழுவதுமாக கவனிக்காமல் விட்டு, அதை மொத்தமாக இழந்தவர்கள் எத்தனையோ பேர். இதற்கு மேல் சிலருக்கு நெகட்டிவ் பேலன்ஸும் ஓடிக் கொண்டிருக்கும். எப்போதாவது அந்த அக்கவுன்ட்டுக்கு தப்பித் தவறி பணம் வந்தால், கடந்த காலத்துக்கு உரிய நெகட்டிவ் பேலன்ஸ் தொகை எல்லாம் எடுத்துக் கொண்டு மிச்சமிருக்கும் பணத்தையே கணக்கில் வைத்தார்கள். 

இதை எல்லாம் பார்த்த மக்கள் அலறியதன் விளைவு, ரிசர்வ் வங்கி இந்த பிரச்னையில் தலையிட்டது. ஆர்பிஐ-யின் தலையீட்டுக்குப் பின் பல வங்கிகளும் இந்தப் மினிமம் பேலன்ஸ் தொகையை வைத்திருக்காதவர்களுக்கான அபராதக் கட்டணம் குறைந் துள்ள மாதிரி வங்கிகள் கணக்கு காட்டுகின்றன. உள்ளபடி பார்த்தால், அப்படி எதுவும் நடந்த மாதிரி தெரியவில்லை. காலாண்டு கட்டணத்துக்குப் பதில் மாத குறைந்தபட்ச இருப்புத் தொகை என்று மாற்றி, முன்பைவிட இன்னும் அதிகமாக வசூலிக்கின்றன. இதனால் விவரமான  வாடிக்கையாளர்கள் கூட தலையில் துண்டைப் போட்டுக் கொள்ளும் நிலைமை. 

உதாரணத்துக்கு, ஹெச்டிஎஃப்சி வங்கியின்  குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்கத் தவறியதற்காக காலாண்டுக்கு ஒருமுறை ரூ.750 கட்டணமாக வாங்கினார்கள். இன்று, சென்னை போன்ற நகரத்தில்  ஒரு காலாண்டு முழுக்க           ரூ.2,500-க்கு கீழ் வைத்திருந்தால், ரூ.1,800 அபராதமாகக் கட்ட  வேண்டியிருக்கிறது.

அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட் அபகரிப்பு!

அப்பாவி வாடிக்கையாளர் களை வாட்டி வதைக்கும் இன் னொரு கட்டணம், அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட் பெறுவதற்காகும். வீட்டுக் கடன் வாங்கும்போது ஆறு மாதத்துக் கான ஸ்டேட்மென்டைக் கேட்கிறார்கள். பொதுவாக, வங்கிகள் தங்களின் செலவைக் குறைப்பதற்காக, வாடிக்கையா ளரின் இ-மெயிலில் ஒவ்வொரு மாதமும் ஸ்டேட்மென்டை வங்கிகள் அனுப்பிவிடுகின்றன. உங்களுக்கு தேவை என்கிறபோது ஸ்டேட்மென்ட் பிரதி எடுத்துத் தரவேண்டும் எனில், அதற்குத் தனிக் கட்டணம் வசூலிக்கிறது. தனியார் வங்கிகள் இந்த நடைமுறையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியபின், இப்போது பொதுத் துறை வங்கிகள் இந்தக் கட்டணத்தை பின்பற்றத் தொடங்கிவிட்டன. 

குறையும் இலவச செக்குகள்!

ஒரு காலாண்டுக்கு 20 காசோலைகள் இலவசம் என்று முன்பு என்றிருந்தது. தற்போது சில தனியார் வங்கிகள் அரையாண்டுக்கு ஒருமுறை 25 காசோலைகள் இலவசம் என்று ஆக்கிவிட்டன. பல பொதுத் துறை வங்கிகள் இன்றும்கூட காலாண்டுக்கு 20 காசோலைகள் இலவசம் என்று வைத்துள்ளன. தனியார் வங்கிகள் இலவச செக்களின் எண்ணிக்கையைக் குறைத்ததைத் தொடர்ந்து ‘நாமும் ஏன் அப்படி செய்யக்கூடாது, அப்படிச் செய்தால் நம் வங்கிக்கு இத்தனை கோடி லாபம் கிடைக் குமே’ என்று யோசிக்க ஆரம்பித்து விட்டன. கூடிய சீக்கிரமே பொதுத் துறை வங்கியிலும் இந்த நடைமுறை வந்துவிடும். அப்படி வந்தால், ப்ளீஸ்... அதிர்ச்சி அடையாதீர்கள்.  

எஸ்எம்எஸ்-க்கும் காசு!

‘எஸ்எம்எஸ் அலர்ட் வசதியைப் பெறுங்கள். உங்கள் பணம் உங்களுக்கே தெரியாமல் எடுத்தால் இந்த அலர்ட் உங்களை எச்சரிக்கும்’ என்று சொன்னதால், பலரும் இந்த வசதியைப் பெற்று பயன்படுத்தத் தொடங்கினார்கள்.  நிறைய பேர் இந்த வசதியை இப்போது பயன்படுத்துவதால், இதற்கும் இப்போது கட்டணம் விதிக்கத் தொடங்கிவிட்டார்கள். வங்கிகளின் வேலையை சுலபமாக்க கொண்டு வரப்பட்ட இந்த வசதி, இப்போது பணம் அள்ளித் தரும் இயந்திரமாக மாறிவிட்டது. 

உதாரணமாக, எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் 27 கோடிக்கு மேல்! இவர்களில் 50 சதவிகிதத்தினர் எஸ்எம்எஸ் சேவையைப் பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். அதாவது, சுமார் 13.5 கோடி பேர். ஒரு ஆண்டுக்கு ஒவ்வொரு வாடிக் கையாளரிடமிருந்தும் ரூ.60 சேவைக் கட்டணமாகப் பெறு கிறது இந்த வங்கி எனக் கொண் டால், எஸ்எம்எஸ் சேவையி லிருந்து மட்டும் இந்த வங்கி ஒரு வருடத்தில் ரூ.810 கோடி வரு மானம் ஈட்டும். மற்ற வங்கிகள் இந்த அளவுக்கு சம்பாதிக்க வில்லை என்றாலும்  இதில் பாதி அளவுக்காவது வசூலிக்க முடி யாதா என்று ஏங்கித் தவிக்கின்றன.

பங்குதாரர்களுக்கு அள்ளித் தர..!

அப்பாவி மக்களிடமிருந்து இவ்வளவு பணத்தையும் வங்கிகள் பிடுங்குகிறதே, இந்தப் பணத்தை எல்லாம் எங்குதான் கொண்டுபோய் கொட்டுகின்றன? விஜய் மல்லையா மாதிரி பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக் கடனைச் சமாளிக்க அப்பாவி மக்களிடமிருந்து பறிக்கப்படும் பணம் ஓரளவுக்கு உதவுகிறது. வாராக் கடன் பிரச்னை இல்லையென்றால், வங்கிகள் தங்கள் பங்குதாரர் களுக்கு அள்ளிக் கொடுக்கும். (இது மாதிரியான வங்கிகளின் வாடிக்கையாளராக இருப்பதற்கான செலவை ஈடு கட்டுவதற்கு ஒரே வழி, அந்த வங்கியின் பங்குகளை வாங்கி அதன் பங்குதாரராக ஆகிவிடுவது தான்!) சில பெரிய தனியார் வங்கிகள் தங்களது ஊழியர் களுக்கு 100 சதவிகித போனஸ் கொடுத்து அசத்துவதும் அப்பாவிகள் கொடுக்கும் இந்தப்  பணத்தில்தான்.  

அமெரிக்காவில் அப்படி இல்லை!

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் வங்கிக் கணக்கில் அல்லது டெபிட்/ கிரெடிட் கார்டில் ஏதேனும் ஏமாற்று வேலை நடந்தால், வாடிக்கை யாளரிடமிருந்து ஒரு புகார் (Affidavit) வாங்கி, அவர் ஏமாந்து தொலைத்த பணத்தை உடனடியாக அவர்கள் கணக்கில் வரவு வைக்கின்றனர். ஆனால் இந்தியாவில், ஆன்லைனில் ஏமாற்றம் நடந்தாலும் சரி, ஆஃப்லைனில் ஏமாற்றம் நடந்தா லும் சரி, ‘அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லை’ என்று வங்கிகள் கையை உதறிவிடு கின்றன. எனவே, விவரமான வாடிக்கையாளர்கள்கூட ஆன்லைன் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்த அஞ்சுகிறார்கள். பிற நாடுகளைப் போல, நம் வங்கிகளும் இதுபோன்ற ஏமாற்றுகளை தங்கள் செலவுக் கணக்கில் எடுத்துக்கொண்டு, வாடிக்கையாளர்களை திடீர் நஷ்டத்திலிருந்து காப்பாற்ற  நடவடிக்கை எடுக்கலாமே!

லாபம் மிக அதிகம்!

வங்கிகளின் தலையாய தொழில், குறைந்த வட்டிக்கு பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டி, பொதுமக்களுக்கு சற்று அதிக வட்டியில் கடன் தருவதுதான். இந்த வட்டி வித்தியாசம் இந்திய வங்கிகளுக்கு மிக அதிகமாக இருக்கிறது. அதாவது, அதிகமான லாபத்தை நம் வங்கிகள் சம்பாதிக்கின்றன. வளர்ந்த பொருளாதாரங்களில் இந்த வட்டி வித்தியாசம் (Interest Spread or Net Interest Margin) மிக மிகக் குறைவு. உதாரணத்துக்கு, ஜப்பானில் இந்த வித்தியாசம் 0.80%, மலேஷியாவில் 1.45%, பல வளர்ந்த நாடுகளில் இது 1 சதவிகிதத்துக்கும் குறைவு. ஆனால், இந்தியாவில் சில தனியார் வங்கிகளுக்கு  இது 4 சதவிகிதத்துக்கும் அதிகம். மொத்த இந்திய வங்கித் துறைக்கு இது 2.50 சதவிகிதத்தைவிட அதிகமாகும். 

இசிஎஸ்-க்கும் இனி சார்ஜ்!

நம் நாட்டில் பிற வருமானத்தை அதிகரிக்க வங்கி அதிகாரிகள் ரூம் போட்டு யோசிப்பார்கள் போல! அப்படி யோசித்தன் விளைவு, சில வங்கிகள் சமீபத்தில் நடைமுறைப்படுத்தியுள்ள  புதிய கட்டணமான,  இசிஎஸ்/ என்ஏசிஹெச் மேண்டேட் வெரிபிஃகேஷன் சார்ஜ் (ECS/ NACH Mandate Verification Charge) என்கிற கட்டணம்.  உதாரணமாக, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற எஸ்ஐபி முதலீடுகளுக்கு இசிஎஸ் (தற்போது இது என்ஏசிஹெச் (NACH – National Automated Clearing House) என்று பெயர்) படிவத்தை பூர்த்தி செய்து தருவோம்.  சமீப காலம் வரை வங்கிகள் இந்தப் படிவத்தை அனுமதிப்பதற்கு எந்தவித சேவைக் கட்டணமும் கேட்கவில்லை.  தற்போது ஆக்ஸிஸ் போன்ற சில வங்கிகள் இதை ஒரு புதிய சேவையாக மாற்றி என்ஏசிஹெச் வெரிஃபிகேஷன் சார்ஜஸ் (NACH Verification Charges) என 100 ரூபாயைக் கட்டணமாக வாங்கத்  தொடங்கியிருக்கின்றன. கூடிய சீக்கிரத்தில் பிற வங்கிகளும் இந்த நடைமுறையைப் பின்பற்றத் தொடங்கவில்லை என்றால் ஆச்சர்யமே! 

செக் ரிட்டர்ன் ஆனாலும் கட்டணம்!

நாம் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த இசிஎஸ் தந்துவிட்டு, சமயத்தில் நம் வங்கிக் கணக்கில் பணமில்லை என்றால் நமக்கு அபராதம் விதிப்பது நியாயமே. ஆனால், யாரோ ஒருவர் நமக்குக் கொடுத்த செக் ரிட்டர்ன் ஆகும்போது,  அதற்காக நம் கணக்கிலிருந்து கட்டணத்தைக் கழிப்பது எந்த ஊர் நியாயம் என்று தெரிய வில்லை. இந்தக் கட்டணம் வங்கிகளைப் பொறுத்து ரூ.150 முதல் ரூ.750 வரை பல ரேஞ்சு களில் கழிக்கப்படுகிறது. 

பல நாடுகளில் டெபிட் கார்டுக்கு எந்தவிதமான ஆண்டுக் கட்டணமும் வசூலிக்கப் படுவதில்லை. இந்தியாவில் வங்கிகளுக்கு அது ஒரு பெரிய வருமானம். ஆண்டுக் கட்டணம் தவிர, வாடிக்கையாளர் ஒவ்வொரு தடவை டெபிட் கார்டை பயன்படுத்தும்போதும் வங்கிக்கு கமிஷன் கிடைக்கும்.  
இப்படி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த வங்கிக் கட்டணங்களுக்கு என்னதான் தீர்வு? 

1. நமது தேவைகளை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் வங்கிகளைத் தேர்வு செய்து கொள்வது. உதாரணத்துக்கு, லட்சுமிவிலாஸ் பேங்க் போன்ற வங்கிகள் கணக்கு வைத்திருக்கும் கிளையில் எவ்வளவு பணம் கட்டினாலும், கட்டணம் ஏதும் விதிப்பதில்லை. மேலும், சிறிய தனியார் வங்கிகளில் சிறு தொழில் செய்பவர்கள் கடன் பெறுவது எளிது. தவிர, கிளை தரும் சேவையும் நன்றாக இருக்கும்.

2. தவறுதலாக வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை ஒரு அளவு வரை திரும்பத் தர பல வங்கிகள் கிளை மேலாளருக்கு அனுமதி தந்துள்ளன.  மேலாளர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி,  உடனே பணத்தை திருப்பித் தரச் சொல்லலாம். ஆனால், பல மேனேஜர்கள் அப்படிச் செய்வதில்லை.

3. அதிகமாக சார்ஜ் செய்யும் வங்கியில் இருந்து வங்கிக் கணக்கை நமது தேவைகளுக்கேற்ப  வேறு வங்கிக்கு மாற்றிக் கொள்வது நல்லது. 

4.ஒவ்வொரு பரிவர்த்தனைக் கும் வங்கிகள் கட்டணம் விதிக் கும்போது அதை நியாயமாகவும் சமுதாயக் கண்ணோட்டத்து டனும் நிர்ணயிக்க வேண்டும். 

5. ஆர்.பி.ஐ-க்குக் கிடைக்கும் வாடிக்கையாளர்களின் புகார்களை வைத்துத்தான்,  வங்கிகளுக்கான அடிப்படைக் கொள்கைகள் உருவாக்கப் படுகின்றன.  வங்கிகள் வரம்புக்கு மீறி சார்ஜ் செய்தால், அந்த வங்கியில் உள்ள பேங்கிங்  ஆம்புட்ஸ்மேனை அணுகி வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களை சமர்பிக்கத் தயங்கக் கூடாது. ஒவ்வொரு வங்கியும் தனது இணையதளத்தில் ஆம்புட்ஸ்மேன் குறித்த விவரங் களைத் தந்துள்ளன என்பதால் யாருக்கு புகார் அனுப்புவது என்று அலைய வேண்டியதில்லை. 

வங்கிகள் தங்கள் பிற வருமானத்தை உயர்த்த நினைப்பதை யாரும் தவறு என்று சொல்ல முடியாது. கட்டணம் இல்லாமல் அளிக்கப்படும் எந்தச் சேவையும் தவறாகவே பயன்படுத்தபடும் என்பது உண்மையே. ஆனால், ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் அப்பாவி மக்களைத் துன்புறுத்தி, அவர்கள் பணத்தை இழந்தாலும் பரவாயில்லை; எங்களுக்கு வருமானம் வேண்டும் என்று நினைப்பது சரியல்ல.

வங்கிகள் எல்லாவற்றுக்கும் கட்டணம் விதிக்கின்றன என  நாமும்  குறை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்காமல், எதற்கு, எவ்வளவு கட்டணம் என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப  நம் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்வதே புத்திசாலித்தனமான வாடிக்கையாளருக்கு அழகு. 
இனியாவது நாம் புத்திசாலித் தனமான வாடிக்கையாளர்களாக இருப்போமா?

எடுக்க உரிமையுண்டு; கொடுக்க அல்ல!

வங்கிகள் தவறாக எடுத்துக்கொண்ட கட்டணங்களை திரும்பத் தரும்படி நாம் வங்கி மேலாளரை அணுகினால், விசித்திரமான காரணத்தைச் சொல்கிறார்கள். ‘‘சார்/ மேடம், கட்டணங்கள் எங்கள் கையில் இல்லை. மும்பையில் இருக்கும் எங்கள் கம்ப்யூட்டர் இந்தக் கட்டணங்களை எடுக்கிறது. எனவே, எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. வேண்டுமென்றால் நீங்கள் எங்களின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் செய்யுங்கள். அல்லது இமெயில் போடுங்கள்’’ என்கிறார்கள். 

இதெல்லாம் நம் தலையெழுத்து என்று விட்டால், வங்கிக்கு லாபம்தான். அல்லது நாம் கொஞ்சம் முன்கோபியாக இருந்து, நம் குரலை உயர்த்திக் கத்தினால், உடனே வங்கி மேனேஜர் வருவார். அவரது அறைக்கு அழைத்துச் சென்று, ‘‘சார், இந்த முறை நான் அப்ரூவல் வாங்கி கட்டணத்தை திரும்பத் தந்துவிடுகிறேன். அடுத்த முறை இதுபோல் நடக்காது’’ என்பார்.  உண்மையில் பார்த்தால் ஒவ்வொரு மேனேஜருக்கும் வங்கியில் ஒரு குறிப்பிட்ட தொகை வரை திரும்பத் தர அனுமதி அளித்திருக்கிறார்கள். அந்த அதிகாரத்தை அடிக்கடி உபயோகித்தால் தனக்கு கெட்ட பெயர் வந்துவிடுமோ என்று மேனேஜர்கள் பயப்படுகிறார்கள். அல்லது அவரது போனஸ் குறைவதற்கு இது ஒரு காரணமாக இருக்கக்கூடாது என்றுகூட அவர் நினைக்கலாம்!