Saturday, May 26, 2012

மாவோயிஸ்ட் பூமியில் 7 நாட்கள்! - 2


யார் அந்த நேத்ரா?' 
நேத்ராவின் முழுப் பெயர்... 'யுஏவி நேத்ரா'. ஆளில்லாமல் உளவு வேலை பார்க்கும் கருவி.
'நண்பன்’ படத்தில், நடிகர் விஜய் ஒரு சின்ன கருவியை ரிமோட் உதவியுடன் பறக்க விடுவார். அதன் வயிற்றுப் பகுதியில் இணைக்கப்பட்டு இருக்கும் ரகசிய கேமரா, நாலாபுறங்களிலும் சுழற்றிச் சுழற்றி காட்சிகளைப் பதிவு செய்யும். அந்தக் காட்சிகளை தரையில் உள்ள லேப்-டாப்பில் பார்த்து ரசிப்பார்கள். கிட்டத்தட்ட அதே மாதிரிதான் நேத்ராவும் செயல்படுகிறது.  
அடர்ந்த காடுகள், மலை முகடுகள், படை முகாம்களின் சுற்றுப்புறம்... எதுவுமே நேத்ராவின் கழுகுக் கண்களில் இருந்து தப்பவே முடியாது. சந்தேகப்படுகிற மாதிரி நடமாட்டம் இருந்தால், அவர்களை துல் லியமாக ஜூம் செய்து படமெடுக்கும். அப்படித்தான், நாமும் நேத்ராவிடம் சிக்கிக்கொண்டோம். பேஸ் ஸ்டேஷனில் இருந்து வந்த உத்தரவின் பேரில், நம் தலைக்கு மிகஅருகில் பறந்து குளோஸ் அப்-பில்  'கிளிக்' செய்துவிட்டு விண்ணில் மறைந்து விட்டது நேத்ரா.    
''ஏன் எங்களைப் படம் எடுத்தீர்கள்?'’ என்று, சி.ஆர்.பி.எஃப்-காரர்களிடம் கேட் டோம்!
'நீங்கள் யார்? இந்த இருட்டு நேரத்தில் எதற்காக வந்தீர்கள்?' என்று கேள்விகளால் துளைத்தெடுத்தனர். அவர்களிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, மேலும் விவரங்களைக் கேட்டு தெரிந்து கொண்டோம்.
நேத்ரா 200 மீ. உயரம் வரை பறக்கும். 1.5 கிலோ எடை கொண்டது. இரவு, பகல் எந்த நேரமானாலும் ரிமோட்டில் அதிகாரிகள் அனுப்பும் உத்தரவுகளுக்கு ஏற்ப படம் எடுத்து அதிகாரிகளின் கணினிக்கு மின்னல் வேகத்தில் அனுப்பும். சுமார் அரை மணி நேரம் வரை பேட்டரியில் இயங்கக்கூடியது. பேட்டரி பவர் குறைந்தால், கிளம்பிய இடத்துக்குத் தானாகவே வந்து சேரும். கீழ்நோக்கி தாழ்வாக இறங்கி வரும்போது, 'படபட’வென நேத்ரா ஒசை எழுப்புவதுதான் இதன் மைனஸ். எதிரிகள் உஷாராகிவிட வாய்ப்பு உண்டு என்கிறார்கள்  போலீஸார். ஆனால், உயரப் பறந்தால், இந்தப் பிரச்னைக்கே இடம் இல்லை!
சரி, மாவோயிஸ்ட் பிரச்னைக்கான அடிப்படைக் காரணம் என்ன? அரசையும் இந்த மண்ணின் பூர்வக் குடிகளையும் எது பிரிக்கிறது?
இங்கே நிலத்துக்குக் கீழே பல கோடி டன் கனிம வளங்கள் புதைந்திருக்கின்றன. ஆனால், அவற்றுக்கு மேலே வாழும் மக்களோ பஞ்சத்தில் அல்லாடும் பரம ஏழைகளாக இருக்கிறார்கள். இந்தியாவில் கிடைக்கும் முக்கியக் கனிமப் பொருட்களில் 40 சதவிகிதம் ஜார்கண்ட்டில்தான் கிடைக்கின்றன. நிலக்கரி, மைக்கா,  தாமிரம் போன்ற பல கனிமங்களை நாட்டுக்குக் கொடுப்பதில் ஜார்கண்ட்டுக்குத்தான் முதல் இடம். இந்தக் கனிமங்களை அள்ளிச் செல்ல காத்திருக்கும் பன்னாட்டு பெருநிறுவனங்களும் அவர்களுக்கு சர்வ பலமாக இருக்கும் மத்திய, மாநில அரசுகளின் தாராளமயக் கொள்கைகளும்தான் அரசுக்கு எதிராக இந்த மக்களைத் திருப்பி இருக் கின்றன.
தலைநகர் ராஞ்சியில் இருந்து 108 கி.மீ. தொலை வில் உள்ள லத்தேகார் மாவட்டத்துக்கு காரில் கிளம்பினோம். கரடுமுரடான பாதை. மூன்று மணி நேரத்துக்கு மேல் பயணம். ஆனால், இவ்வளவு தூரம் பயணித்தபோது, இடையில் நம் கண்ணுக்குப் பட்டது, ஒரேயரு தனியார் பொறியியல் கல்லூரி மட்டும்தான்.
கார் டிரைவரிடம் விசாரித்தோம். ''இன்னும் 40 கி.மீ. தூரத்துக்கு பெரிய கல்லூரி எதுவுமே கிடையாது. பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி இருக்கு. ஆனால், நிறைய இடங்களில் வாத்தியார்களோ, மருத்துவர்களோ வருவதே கிடையாது. அதனால், மக்களும் அங்கே போவது குறைவு'' என்றார்.
வெயில் 105 டிகிரியை எட்டிக்கொண்டு இருந்தது. சைக்கிள், டூ வீலர்களில் போகும் ஆண்கள் தங்கள் முகத்தையும் தலையையும் துண்டால் மறைத்துக் கட்டி இருந்தனர். ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்குச் செல்ல மக்கள் படும் பாடு... பரிதாபம். ஷேர் ஆட்டோக்கள்தான் அதிகம். அரசு பஸ்களைப் பார்ப்பதே அரிது. தென்பட்ட ஒன்றிரண்டு பஸ்களும் தனியார் பஸ்கள்தான். சில இடங்களில் மினி பஸ் களையும் அவற்றின் கூரை மீது உட்கார்ந்தபடி செல்லும் பயணிகளையும் காண முடிந்தது. நெடுஞ்சாலைகளில் ரோடு போடுகிறார்கள். அங்கே பயன் படுத்தப்படும் இயந்திரங்கள் படு லேட்டஸ்ட். ஆம், கான்ட்ராக்டர்கள் பணக்காரர்கள். ஆனால், வேகாத வெயிலில் வேலை பார்க்கும் கூலி ஆட்கள் நிலைதான் மிகவும் மோசம். சட்டை கூட அணியாமல் ரோடு வேலை செய்கின்றனர். மின்சாரம் இன்னும் பல இடங்களுக்கு எட்டாக்கனிதான்! அழுது வடியும் குறைந்த அழுத்த மின்சாரம் அல்லது முழு மின்வெட்டு என்பதுதான் நிலைமை. நாடு முழுவதுக்கும் அதிகபட்ச நிலக்கரி அனுப்பும் ஒரு மாநிலம், இந்த நிலையில் இருந்தால் மக்கள் வேறு எப்படித்தான் இருப்பார்கள்?
செல்லும் வழியில் பல இடங்களில் ஊருக்குள் சுற்றினோம். நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல், பெரும்பாலான வீடுகள் ஓட்டு வீடுக ளாகவே இருக்கின்றன. பெரும்பாலான மக்கள் வேலை செய்தபடியே இருக்கிறார்கள். பீடி சுற்றும் இலைகளை நிறுவனங்களிடம் வாங்கி வருகிறார்கள். சின்னக் குழந்தை முதல் வயதான பெண்கள் வரை எல்லோரும் காலி இடங்களில் இலைகளைப் பரப்புகிறார்கள். அது காய்ந்து சருகானதும், வீட்டு ஆண்கள் அவற்றை எடுத்துப்போய், இலைகளைக் கொடுத்த நிறுவனத்திடம் கொடுக்கிறார்கள். குடும்பத்தில் எல்லோரும் வேலை பார்த்தால் 150 ரூபாய் வரை கிடைக்குமாம். நெல், கோதுமை, உருளை, சுரைக்காய், பூசணி என்று விவசாயம் ஒரு பக்கம் நடந்தாலும், பலருக்கு மாடு மேய்ப்பதுதான் முக்கியத் தொழில். தவிர, வேறு ஒரு முக்கியத் தொழிலும் இருக்கிறது என்று காதைக் கடித்தார் எங்கள் காரோட்டி.
அது... போதைத் தொழில்!
சாலையில் கூவிக்கூவி அழைத்த சிறுவர்களைப் பார்த்து வண்டியை நிறுத்தினோம். ''வாங்க சார்... 'மவ்வா’ ரெடியா இருக்கு'' என்று நம்மை அழைத்துச் சென்றான் ஒரு சிறுவன். மரத்தடியில் சின்னச் சின்ன குடிசைகள். குடிசைகளுக்குள் பானைகள், டம்ளர்கள், ஊறுகாய்.
''சாரே... இது பயங்கரமான போதைச் சமாச்சாரம். மரத்துல இருந்து விழுகிற பூ, பழங்களை எடுத்து வந்து ஊற வைத்துத் தயார் செய்கிறார்கள். ஒரு டம்ளர் 20 ரூபாய்தான். ஆனால், குடித்தால் சீமைச் சரக்குகளைவிட கிக் ஏறும். ஆனால், இதை விற்க தடை இருக்கிறது'' என்று முன்னுரை கொடுத்தார் நம்முடைய காரோட்டி. பழச்சாறு போல இருக்கிறது பானைக்குள் இருந்த சமாச்சாரம். இதே பகுதியில் கள்ளும் விற்கப்படுகிறது. மரத்தடியில் சின்ன கேஸ் சிலிண்டர் வைத்து ஆம்லேட் போட்டுத் தருகிறார்கள். டபுள் ஆம்லேட்டின் விலை 15 ரூபாய்.
மவ்வா விற்றுக்கொண்டிருந்த சிறுவனிடம் பேசினோம்.
''உன் பேரு என்னப்பா?''
''பாபுலால்.''
''நீ ஏன் பள்ளிக்கூடம் போகலை?''
''வீட்டுல படிப்பை நிறுத்திட்டாங்க. பள்ளிக் கூடத்துக்கு வாத்தியார் வர்றதில்லை. காட்டு வழிப் பாதையில போகணும். கண்ணிவெடி புதைச்சு வச்சிருக்காங்களாம். அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. லத்தேகர் டவுனுக்குப் போக காசு வேணும். எங்களுக்கு வேற வேலை தெரியாது. நாளைக்கு இங்கே நான் விற்க வர மாட்டேன். அப்பாவைக் கூட்டிக்கிட்டு ஆஸ்பத் திரிக்குப் போவேன்...'' என்று என்னென்னவோ பேசினான்.
சின்னப் பசங்களில் தொடங்கி பல் போன கிழங்கட்டைகள் வரை ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் மவ்வாவை வாங்கி மடக்மடக்கெனக் குடித்துவிட்டு தள்ளாடியபடி நடந்து போகிறார்கள். நம்மூரில் சர்பத் குடிப்பது போல, அங்கே ஹாடியா என்கிற பெயரில் வெள்ளை நிறக் கஞ்சி குடிக்கிறார்கள். இது கிட்டத்தட்ட நம்ம ஊர் சுண்டக்கஞ்சி ரகம்.  இரவு நெருங்கியது. மாவோயிஸ்ட் மற்றும் சி.ஆர்.பி.எஃப்- காரர்கள் நடமாட்டம் உள்ள ஒரு கிராமத்தை நோக்கிச் சென்றோம். இருட்டில் நம் கார் கண்ணாடியைத் துளைத்துக் கொண்டு வந்தது பளீச் வெளிச்சம்.
 யானையை எறும்புகள் விரட்டி அடித்தன!
 ராஞ்சியில் உள்ள மனித உரிமை ஆர்வலர், ஆய்வாளர், எழுத்தாளர் ஸ்டான் சுவாமியின் பூர்வீகம் தமிழகம். கடந்த 22 வருடங்களாகப் பழங்குடி மக்கள் உரிமைகளுக்காகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருபவர்.
''பொதுக்காரியம் என்ற பெயரில் 17 லட்சம் ஏக்கர் நிலத்தை ஆதிவாசிகளிடம் இருந்து அரசு பறித்து விட்டது. இதனால், 15 லட்சம் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். மிகச்சிறிய தொகையை நஷ்டஈடாகக் கொடுத்து வலுக்கட்டாயமாக மக்களை அவர்களுடைய இடங்களில் இருந்து விரட்டி விட்டனர். மறுவாழ்வு விஷயங்களை முறைப்படி செய்துதரவும் இல்லை. மக்களை விரட்டியும் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்தும் தொழிற்சாலைகள் முளைத்தன. அதனால் போராட்டம் நடந்தது. 2000-ம் ஆண்டு தனி மாநிலமாக ஜார்க்கண்ட் உதயமானது. 'இனி நம் மாநில ஆட்கள் ஆட்சி செய்ய வருவார்கள். புறக்கணிக்கப்பட்ட மக்களை முன்னுக்குக் கொண்டு வருவார்கள்' என்று நம்பினோம். ஆனால், நடந்ததோ அதற்கு நேர் எதிர்.
கனிம வளங்களைச் சுரண்டும் சுரங்கத் தொழிலில் உள்ள பெருநிறுவனங்களை அவர்கள் இங்கு கொண்டு வந்தனர். கடந்த 12 வருடங்களில், கடகடவென 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டார்கள். மின்னல் வேகத்தில், ஆதிவாசிகளின் கனிம வளங்களை அள்ளிப்போகவே இந்த ஒப்பந் தங்கள் போடப்பட்டன. இது, மக்களுக்கு ஆத் திரத்தை ஏற்படுத்தியது. 'எல்லாவற்றையும் இழந்து விட்டோம். இனி இழப்பதற்கு ஏதுமில்லை. இருப்பதையாவது காப்பாற்ற வேண்டும்' என்று, நிலம் தர மறுக்கும் போராட்டங்களை 2005-ல் தொடங்கினர்.
பிரபல ஸ்டீல் தொழில் அதிபர் மிட்டல் இங்கே 12 ஆயிரம் ஏக்கர் நிலம் கேட்டார். மக்கள் ஒன்று சேர்ந்து விரட்டி அடித்தனர். 'யானையை எறும்புகள் விரட்டி அடித்தன' என்று பத்திரிகையாளர்கள் வர்ணித்தார்கள். இந்த நேரத்தில்தான், அரசாங்கத்துக்கு கௌரவப் பிரச்னை தலைதூக்கியது. பரம ஏழைகளுக்கு எங்கிருந்து இவ்வளவு வீரம் வந்தது என்று உற்றுக் கவனித்தார்கள். இவர்களை ஒழிக்க மாவோயிஸ்ட்டுகள் என்ற முத்திரை குத்தினர். கடந்த 10 ஆண்டுகளில், ஜார்கண்ட் மாநில ஜெயில்களில் ஆதிவாசிகள், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் சுமார் 6,000 பேர் வாடுகின்றனர். என்ன நடந்தாலும் மக்கள் போராட்டம் இனி அடங்கவே அடங்காது'' என்றார்.

-J.Vikatan team.

Friday, May 25, 2012

2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்Source: Collection from http://www.uyirmmai.com/

மேலே உள்ள படத்தில் இருக்கும் இந்த மாயா இன மனிதன் என்ன செய்துகொண்டிருக்கிறார்இந்தப் படத்தைப் பார்க்கும் போதுஏதோ வித்தியாசமாகவும்,ஆச்சரியமாகவும் உங்களுக்கு இருக்கும்அது என்னவாக இருக்கும் என்னும்பிரச்சினையை உங்களிடமே விட்டுவிட்டு நான் தொடர்கிறேன்.......!
கடந்த தொடரில் கொடுத்திருந்த படங்களில் இருப்பவை பறவைகளாபூச்சிகளா?மீன்களா?  இல்லை விமானங்களாஎன்னும் சந்தேகத்துடன் கடந்த பதிவில் உங்களிடமிருந்து விடைபெற்றிருந்தேன்அந்த  உருவங்கள் ஏற்படுத்திய பாதிப்பு உங்களை விட்டு அகலச் சிறிது காலமாகும்அந்த  அளவுக்கு உருவங்கள்இருந்தது என்னவோ நிஜம்தான்இல்லையா
இதுவரை, 'ரைட் சகோதரர்கள்விமானத்தைக் கண்டுபிடித்தார்கள்என்று நம்பிக் கொண்டிருக்கும் வேளையில்அவற்றைப் புறம் தள்ளும் பலஇரகசியங்கள் எங்கோ ஒரு மூலையில்மத்திய அமெரிக்காவில்,எப்போதோ மறைந்திருக்கின்றது என்பது ஆச்சரியம்தானே! அதைவிட ஆச்சரியம்,இந்தச் சிறிய விமானங்கள் போலுள்ளவற்றை விஞ்ஞானிகள் ஆராய்ந்த போது,அவை விமானப் பறப்புச் சக்திக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது என்பதைக் கண்டுகொண்டார்கள். ரைட் சகோதரர்கள் கண்டு பிடித்த விமானம் கூட மிகப் பழமைவாய்ந்ததுஆனால்இந்த உருவங்கள் நவீன விமானங்கள்போல வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. 
இதுவெல்லாம் எப்படிச் சாத்தியம்விஞ்ஞான அறிவையும்விண்வெளிஅறிவையும் மாயா இனத்தவர் பெற்றது எப்படிஆயிரம் ஆண்டுகளுக்கு முன்காட்டுவாசிகள் போல வாழ்ந்த மக்கள்எப்படி இவ்வளவு அறிவைக் கொண்டிருக்கமுடியும்?  இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதிலாகநாம் உடன் புரிந்துகொள்ளக்கூடியது,  விண்ணிலிருந்து மாயன் இனத்தவரை நோக்கியாராவது வந்திருக்க வேண்டும் என்பதும்அவர்கள் மூலமாக மாயாஇனத்தவர்களுக்கு இந்தளவுக்கு அறிவு கிடைத்திருக்க வேண்டும் என்பதும்தான்.அப்படி இல்லையெனில்ஒன்றுமே இல்லாத ஒன்றுக்கு இவ்வளவு பில்டப்பை நான் கொடுப்பதாகவும் இருக்கலாம். 
ஒருவேளை விண்வெளியில் இருந்து அயல்கிரகவாசிகள்வந்திருந்தால்அவர்களை மாயாக்கள் பதிவு செய்திருப்பார்கள் அல்லவா?அப்படியானால் அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள்? 'ஏலியன்என்றுஅழைக்கப்படும் அயல்கிரகவாசியின் வினோத தலையுடன் உள்ள உருவங்களை எத்தனை படங்களில்தான் நாம் பார்த்திருப்போம். அப்படிப்பட்ட உருவங்களை மாயன்களும் பார்த்திருப்பார்களோ?
ஆம்! அதற்கு சாத்தியங்கள் அதிகமாகவே காணப்படுவது போல மாயன்உருவாக்கிய வடிவங்கள் சில உள்ளன.  அவற்றை நீங்களே பாருங்கள்.......!
இந்த உருவங்களைப் பார்த்தீர்கள் அல்லவாஇவை அயல்கிரகவாசிகளின் உருவம்தான் என்றால்அவர்கள் மாயன்களிடம் மட்டும்தான் வந்திருக்க வேண்டுமா...?  இப்படிப்பட்ட ஆச்சரியங்கள் மாயன் இனத்தவருக்கு மட்டும்தான் ஏற்பட்டதா அல்லது வேறு யாருக்காவது ஏற்பட்டதாஅப்படி வேறுஇனத்தவருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டதா எனப் பார்க்கும் போதுஅங்கும்எமக்கு ஆச்சரியங்களே காத்திருந்ததன.
பிரபலமான எகிப்திய பிரமிட்களை நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். பல மர்மங்களைத் தன்னுள்ளே அடக்கிய உலக அதிசயமாகப் பார்க்கப்படுவது இந்தப் பிரமிட்கள்இந்தப் பிரமிட்கள் என்றாலே எமக்குத் தோன்றுவது பிரமிப்புத்தான். 
எகிப்தியப் பிரமிட்களில் இருந்த சித்திர வடிவ எழுத்துகளை ஆராய்ந்த போது அங்கு கிடைத்ததும் அதிர்ச்சிதான்.
அப்படி என்னதான் இருந்தது?
கொஞ்சம் மூச்சை அப்படியே இறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள்............!
இப்போ இவற்றைப் பாருங்கள்..........!!
என்ன உங்களால்  நம்பமுடியவில்லையல்லவாசினிமாப் படங்களில் வருவதுபோன்றுஅதே வடிவிலான உருவம்ஆச்சரியமாக இல்லை அல்லது சினிமாப் படங்களில் இவற்றைப் பார்த்துதான் ஏலியன் உருவங்களை உருவாக்கினார்களா?
சரிஇதுக்கே அசந்தால் எப்படிஇன்னும் இருக்கிறது பாருங்கள்.
மேலே காட்டப்படிருக்கும் இரண்டு படங்களிலும் உள்ள வித்தியாசமானதலைகளுடன் கூடிய மனிதர்களைக் கவனியுங்கள்அப்படி உருவத்துடன்ஒப்பிடக்கூடிய எந்த ஒரு எகிப்தியரும் இருந்திருக்கவில்லை என்பதுதான் இங்குஆச்சரியம்மனித இனத்தின் தலையானது அன்று முதல் இன்று வரை சில குறிப்பிட்டபரிமாணங்களைக் கொண்டதாகவே கூர்ப்படைந்து வந்திருக்கிறதுஅது தாண்டியஎதையும் மனிதனாக எம்மால் பார்க்க முடிவதில்லைஆனால் பின்னால் நீண்டதாகக் காணப்படும் இத்தலையுள்ள உருவங்கள் எம்மைஆச்சரியப்படுத்துகின்றன. 
இப்போது நான் தரும் இந்த உருவத்தைப் பாருங்கள்.........!
எகிப்திய மன்னன் பாரோ அகெனாட்டன் (Pharaoh Akhenaten) என்பவனின் மனைவிஇவள்மகாராணிஇவள் வாழ்ந்த காலம் கி.மு.1370 இலிருந்து கி.மு.1330. இவள் பெயர்நெபர்டிடி (Nefertiti). இவளைப் பற்றி இங்கு ஏன் நான் சொல்கிறேன் என்று யோசிப்பீர்கள். காரணம் உண்டு.
இவளது தலைக் கவசம் இல்லாத சிலை ஒன்று கண்காட்சிச் சாலையில்இருக்கிறதுஅது இதுதான்.
இவளது தலை ஏன் இவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும்எகிப்திய வரலாற்றில் நெபர்டிடியின் சரித்திரம் மர்மம் வாய்ந்ததாகவே இருக்கிறதுஇவள் அயல்கிரகத்தில் இருந்து வந்திருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா...?
சரிநெபர்டிடியின் தலை கொஞ்சம் பெரிதென்றே நாம் வைத்துக் கொள்ளலாம்.இவளுக்கும் ஏலியனுக்கும் சம்பந்தம் இல்லையென்றே எடுத்துக் கொள்வோம்.ஆனால் நெபர்டிடியும் அவளது கணவனும் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் இந்தச் சித்திரத்தைப் பார்த்ததும் அந்த நம்பிக்கையும் அடியோடு தகர்ந்துவிடுகிறதல்லவா?
இவை எல்லாவற்றையும் விட்டுவிடலாம்எதுவுமே இல்லாததை நாங்கள்என்னென்னவோ சொல்லி மாற்றிவிடுகிறோம் என்றே வைத்துக் கொள்வோம்.அப்படி என்றால் இந்தப் படம் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா..
இந்தப் படத்தில் என்ன இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள்சரி, கொஞ்சம்பெரிதாக்கிப் பார்க்கலாம். 
விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட் படத்தில் தெரிகிறதா...அதன் அளவு எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும் என்பதை அதன் அருகே இருக்கும்மனிதர்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.
அடப் போங்கப்பு....! சும்மா கூராக இருப்பதெல்லாம் உங்களுக்கு ராக்கெட்டா என்று கேட்கத் தோன்றுகிறதா
சரிஅப்போஇதையும் பாருங்கள்........! 
இந்தக் காலத்தில் இருக்கும் அனைத்து விதமான விமானங்களும் அடங்கிய ஓவியம்இதுதலையே சுற்றுகிறதா..
இதற்கு மேலேயும் சொன்னால் தாங்கமுடியாமல் போகலாம்எனவே அடுத்ததொடரில் சந்திப்போம்.
நான் இந்தத் தொடரைமாயா இனத்தவர் சொல்லியபடி, '2012 இல் உலகம் அழியுமா?இல்லையா?' என ஆராய்வதற்காகவே ஆரம்பித்தேன்ஆனால் மாயா பற்றிஎதுவுமே சொல்லாமல்ஏதேதோ சொல்லிக் கொண்டு போகிறேன் என்று நீங்கள்நினைக்கலாம்மாயா இன மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னதன் பேரில்உலகம் அழியும் என்று நாம் ஏன் நம்ப வேண்டும்இந்தப் பயம் அறிவியலாளர்களிடையே கூடஇரண்டாகப் பிரிந்து விவாதிக்கும் அளவுக்குப்பெரிதாகியதன் காரணம் என்னஅந்த அளவுக்கு இந்த மாயாக்கள் முக்கியமானவர்களாஎன்ற கேள்விகளுக்கு நாம் பதில் தேடும்போதுஉலகத்தில் நடைபெற்ற பல மர்மங்களையும் நாம் பார்த்தே ஆக வேண்டும்.
அத்துடன்நான்  குறிப்பிடும் சம்பவங்களும்படங்களும் அறிவியலுக்கு ஒத்து வராத,மூட நம்பிக்கைகளைச் சொல்லுவதாக நீங்கள் கருதலாம். ஆனால்உலகத்தில் பல விடுவிக்கப்படாத மர்ம முடிச்சுகள் எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றனஅவற்றிற்குக் காரணமாகதிடமான ஒரு முடிவை எம்மால் எடுக்க முடிவதில்லைஆனாலும்அந்த மர்மங்களை நாம் தெரிந்து கொள்வதில் தப்பு ஒன்றும் இல்லைஉலகத்தில் இப்படி எல்லாம் இருக்கின்றன என்பதே தெரியாமல் எம்மில் பலர் இருக்கிறோம்அதனால் அவற்றை முதலில் பார்த்துவிடுவோம். 
நவீன விஞ்ஞானம் இன்றிலிருந்து கிட்டத்தட்ட 400 ஆண்டுகளிலிருந்துதான் ஆரம்பித்ததுஅது கடந்த 100 வருடங்களில் மிகவும் அசுரத்தனமான வேகத்தில் பிராயாணித்துஇன்று எல்லையில்லாமல் விரிவடைந்து காணப்படுகிறதுபல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள்கண்டுபிடிக்கப்பட்டது இந்தக் காலப் பகுதிகளில்தான்.
தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison) என்னும் விஞ்ஞானி 1879ம் ஆண்டுகளில் மின் விளக்கைக் கண்டுபிடித்தார் என்று எமக்குத் தெரியும். அதைத்தான் உண்மையென்றும் நாம் இன்றுவரை நம்பியும்  வருகின்றோம்ஆனால்எகிப்தில் உள்ள டெண்டெரா (Temple of Hathor, Dendera) என்னுமிடத்தில்,  உள்ள நாலாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் சுவர்களில் உள்ள சில சித்திரங்கள் எம்மை வாயடைக்கப் பண்ணியிருக்கின்றது (அந்தக் கோவிலின் படமே மேலே ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது).
அந்தக் கோவிலின் சுவரில் என்ன சித்திரம் இருந்தது என்று பார்க்கலாமா?
இவற்றைப் பார்த்தவுடனேயேஇவை இரண்டும் மின் விளக்குகள் வடிவத்தில் இருக்கின்றன என்று நான் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும்அவற்றைச் சரியாகப் பாருங்கள்அந்த மின் விளக்குகளின் கீழ்ப்பகுதியில் உள்ள குமிழும்,அதில் பொருத்தப்பட்டிருக்கும் நீண்ட இழையும் (wire), மின் விளக்கின் உள்ளே இருக்கும் எரியிழையும்எமக்கு வேறு எதையும் ஞாபகப்படுத்த முடியாதுஅந்தச் சித்திரத்தை கொஞ்சம் பெரிதாகவும்அது இருக்கும் அந்தக் கோவிலின் சுவரையும் இந்தப் படங்களில் பாருங்கள்.
"என்ன விளையாடுகிறீர்களாஅது ஏதோ கத்தரிக்காய் போல ஒரு உருவத்தில் இருக்கிறதுஎன நீங்கள் அலறுவது புரிகிறதுகத்தரிக்காய் ஒரு மனிதன் பிடித்துக் கொள்ளும் அளவுக்குப் பெரிதாக இருக்காதுஅத்துடன் எந்த ஒரு காயுக்கும் அடியில் உள்ள தண்டு இவ்வளவு நீளத்தில் இருக்காதுஅத்துடன் அதன் நடுவே உள்ள மின்னிழை போன்ற அமைப்பும் வேறு எதிலும் இருப்பதாகத்தெரியவில்லை. 
இந்த ஒரு சித்திரத்தை வைத்து இப்படிப்பட்ட முடிவுக்கு நாம் வரமுடியாது என்பது நிஜம்தான்இது போன்ற பல அமைப்புகளுடன் கூடிய சித்திரங்கள் எகிப்து பிரமிட்களில் காணப்பட்டாலும்எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்து வெறுப்பேற்ற முடியாததாகையால்குறிப்பாக நான் தரும் இந்தப் படத்தைப் பாருங்கள்உங்கள் சந்தேகம் குறைவதற்கு சாத்தியம் அதிகமாகும்.
இந்தப் படத்தில் உள்ளவையும் மின்விளக்குகள்தானாஇல்லையாஎன்கிறமுடிவுக்கு நீங்கள் வருவதற்கு முன்னர்அவை வெளிச்சம் தந்தால் இப்படிக்காட்சியளிக்குமா என்னும் படத்தையும் தருகிறேன் பாருங்கள்.
'இவற்றை எல்லாம் எம்மால் நம்ப முடியாதுஇவையெல்லாம் வேறு ஏதோசித்திரங்கள்என்று சொல்லி நானும்நீங்களும் இதிலிருந்து நகர்ந்து விடலாம்.ஆனால் பாக்தாத் (Baghdad) நகரில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள், 'இல்லை,இவை எல்லாம் மின்சாரம் சம்பந்தமானவையேஎன்ற  முடிவுக்கு நாம்வரவேண்டிய சூழலில்எம்மை வைத்துவிட்டது.
கி.மு.250 காலங்களில் இந்தப் பொருள் வழக்கில் இருந்திருக்கிறது. அதைத் தற்சமயம் கண்டெடுத்த ஆராய்ச்சியாளர்களே அதைக் கண்டு கொஞ்சம் அசந்ததுஎன்னமோ உண்மைதான்அந்தப் பொருள் என்ன தெரியுமாபாட்டரிகள். 
"என்ன பாட்டரிகளாகி.மு.250 வருடத்திலா?" என்றுதானே கேட்கிறீர்கள்நீங்களே பாருங்கள்.
எல்லாமே நாம் இப்போதான் கண்டுபிடித்தோம் என மார்தட்டும் எங்களுக்கு,இவையெல்லாம் மறைமுகமாக சாட்டையடிகளைக் கொடுக்கின்றனஇவை பற்றிபல மாற்றுக் கருத்துகள் இருந்தாலும்இவை எம்மை யோசிக்க வைக்கின்றன.உங்களையும் இப்போது யோசிக்க வைத்திருக்கும்.
சரிஇவையெல்லாம் உண்மையில் மின்சாரம் சம்பந்தமானவை என்றால்இந்த அறிவை அந்தப் பழமையான மக்கள் எப்படிப் பெற்றுக் கொண்டார்கள்இந்த மாபெரும் கேள்வியுடன் நாம் எகிப்தைவிட்டு மாயனை நோக்கி நகரலாம்.
அதற்கு முன்னர் நீங்கள் வாழ்நாளில் நம்பவே முடியாத ஒரு வரலாற்றுஅடையாளம் ஒன்றை சுட்டிக் காட்டிவிட்டுச் செல்கிறேன்அதைப் பார்த்தால் என்ன சொல்வதென்றே தெரியாமல் இருந்து விடுவீர்கள். ஸ்பெயினில் கி.பி.1200ஆண்டுகளில் கட்டப்பட்ட ஒரு சர்ச்சில் உள்ள சிலையின் இந்தப் படத்தைப் பாருங்கள். 
என்ன சரியாகத் தெரியாவிட்டால் கொஞ்சம் பெரிதாகப் பார்க்கலாம்.
நவீன விண்வெளி மனிதன் ஒருவன்அதே உடைகள்காலணிகள்,தலையணிகளுடன் கி.பி.1200 ஆண்டில் கட்டப்பட்ட சர்ச்சில் இருப்பது ஆச்சரியத்தின்உச்சமல்லவா
இந்தச் சிலை எப்படி அந்தச் சர்ச்சில் வந்திருக்கலாம் என்ற கேள்வியை யோசித்தபடியே அடுத்த வாரம்வரை காத்திருங்கள்.
இதற்கான விடையையும்மாயன்களைப் பற்றியும் அடுத்த தொடரில் பார்க்கலாம்.

எப்பொழுதும் விழிப்புணர்வு என்பது எமக்கு மிக அவசியமானதுநாம்எல்லாவற்றையும் நம்புகிறோம்எல்லாரையும் நம்புகிறோம். அரசியல்வாதியாக இருந்தாலென்னமதவாதியாக இருந்தாலென்னஎழுத்தாளனாயிருந்தாலென்ன,எல்லாரையும் சுலபமாக நம்பிவிடுகிறோம். எமது இந்த நம்பிக்கையையேபலகீனமாகக் கொண்டுதப்பான கருத்துகளை எம்முள் விதைப்பதற்கு ஒரு கூட்டமேஎம்முன்னே காத்திருக்கிறதுஅதனால்தான்அடிப்படையில் குறைந்தபட்சமாவதுசிந்திக்க வேண்டும் என்று சொல்கிறது அறிவியல்பல விசயங்களுக்கு விடைகள்இல்லாதபோதும்தர்க்க ரீதியான முடிவுகளை எடுக்கஅறிவியல் எம்மைவற்புறுத்துகிறதுஆதாரமில்லாத எதையும் அறிவியல் அப்படியே ஏற்றுக் கொண்டு விடுவதில்லை.
ஒன்றைச் சரியாகக் கணிப்பது என்றால் என்னதர்க்க ரீதியாக சிந்திப்பது என்றால் என்னஎன்பது பலருக்குத் தெரிவதில்லை. பரீட்சைகளில் வரும் வினாத்தாள்களில்ஒரு வினாவுக்கு நான்கு பதில்கள் கொடுத்திருப்பார்கள் அல்லவாஅதில் சரியானவிடையைத் தெரிந்தெடுப்பது சரியான கணிப்பு.  அதே நேரத்தில் சரியான விடைஎதுவென எமக்குத் தெரியாத பட்சத்தில்தப்பான பதில்கள் எவையாயிருக்கும் எனச் சிந்தித்துஅவற்றை நீக்குவதன் மூலம் சரியான விடையைக் கண்டுபிடிப்பதுதான் தர்க்க ரீதியாக முடிவெடுப்பது என்பது.
ஓவியத்தில் நாம் கோடுகளையும்நிறங்களையும் படிப்படியாகசேர்த்துச் சேர்த்துமுழு ஓவியத்தைப் படைக்கின்றோம்ஆனால் சிலையில்அதைச் செய்யும் கல்லில்இருந்து தேவையற்ற பாகங்களை படிப்படியாக நீக்கிமுழுச் சிலையையும்வடிக்கிறோம்ஒன்று சேர்த்தல்மற்றது நீக்கல்இரண்டும் இறுதியில் முழுமையான படைப்பாய் மாறுகின்றன.
ஒரு  விண்வெளி மனிதன்  கிருஸ்தவத் தேவாலயத்தில் சிலை வடிவமாக இருக்கும்படங்களைக் கடந்த பதிவில் தந்தது ஞாபகம் இருக்கலாம்அந்தக் கிருஸ்தவதேவாலயம் ஸ்பெயின் நாட்டில் உள்ள 'சலமன்கா' (Salamanca) என்னும் ஊரில்இருக்கிறதுஅந்தத் தேவாலயம் கட்டப்பட்டது எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர்.அதாவது கி.பி.1200 களில் கட்டப்பட்டது. அதில் எப்படி ஒரு நாசா விண்வெளிப்பயணியின் உருவம் வரமுடியும்அதற்குச் சாத்தியம் உண்டாஎனச் சிந்தித்தால்,சாத்தியமே இல்லை எனத்தான் சொல்ல வேண்டும்அந்த உருவத்தில் இருக்கும்காலணி முதல் ஜாக்கெட் வரை எல்லாமேதத்ரூபமாக இன்றைய நவீன விண்வெளிப் பயணி போல இருப்பது என்னவோ நெருடலான விசயம்.மாயாக்களோ அல்லது எகிப்திய பிரமிட்களோ இப்படிச் சித்திரங்களைக்கொடுத்தாலும்இவ்வளவு தத்ரூபமாக கொடுக்கவில்லை.
ஆராய்ந்து பார்த்ததில் அந்த சிலை உண்மையாக 800 ஆண்டுகளுக்கு முன்னர்உருவாக்கப்பட்டதில்லை எனத் தெரிய வந்ததுஇந்த தேவாலயம் 1992ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட போதுஇந்த விண்வெளிப் பயணியின் சிலை ஒருபோத்துக்கேய சிற்பியால் சேர்க்கப்பட்டிருக்கிறதுஎனவே அது உண்மையாக 800வருடப் பழமை வாய்ந்ததல்ல. 
இதுவரை மாயாக்கள் வாழ்ந்த இடத்தில் இல்லாமல் வேறு இடங்களில் சுற்றித் திரிந்த நாம் இனி அவர்கள் வாழ்ந்த இடத்துக்குச் செல்வது நல்லதுஇனி தொடர்ச்சியாக மாயாக்களின் மர்மங்களுக்குள் நாம் பிரயாணம் செய்யலாம் வாருங்கள்........!
மாயன் இனத்தவர்கள் பற்றிச் சொல்லும்போதுஆரம்பமே மாயனின்  அதிஉச்சக்கட்ட மர்மத்துடன் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்அதனால் நீங்கள் அவற்றிற்கு உங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்'என்னடா,இந்த நபர் இவ்வளவு பில்டப் கொடுக்கிறாரேஎன்று நினைக்கலாம்நான் சொல்லப் போகும் விசயம்மாயன் இனத்தின் சரித்திரத்தின் மைல் கல்லாகஅமைந்த ஒன்றுஉங்களை அதிர வைக்கப் போகும் விசயமும் இதுதான். உலகில்உள்ள ஆராய்ச்சியாளர்களும்அறிவியலாளர்களும் இதுவரை உலகத்தில்நடைபெற்ற அனைத்து மர்மங்களின் முடிச்சுகளையும் தங்களால் இயன்ற அளவிற்குஅவிழ்த்துக் கொண்டே சென்றிருக்கின்றனர்ஆனால் அவர்கள் கூடத் தோற்ற ஒருஇடம் உண்டென்றால்அது இப்போது நான் சொல்லப் போகும் விசயத்தில்தான்
அப்படி என்னதான் அந்த விசயம் என்று நினைக்கிறீர்கள் அல்லவா?சொல்கிறேன்......!
மாயன் இனத்தவர் வாழ்ந்த பகுதியில் ஆராய்ச்சிக்கென வந்தவர் ஒருவரின்கண்ணில் தற்செயலாகத் தடுப்பட்ட பொருளொன்றுஅதைக் கண்டெடுத்தவரை மலைக்க வைத்ததுஅந்தப் பொருள் ஒரு மண்டை ஓடு…….!
"அடச் சே…..! ஒரு மண்டை ஓட்டுக்கா இவ்வளவு பில்டப் கொடுத்தாய்?"என்றுதானே கேட்கிறீர்கள்கொஞ்சம் பொறுங்கள்முழுவதும் சொல்லிவிடுகிறேன். ஒரு சாதாரண மண்டை ஓட்டுக்காகவா நான் இவ்வளவு பேசுவேன்.
அது ஒரு சாதாரன மண்டை ஓடே அல்ல......! அது ஒரு 'கிறிஸ்டல்மண்டை ஓடு.
ஆம்'கிறிஸ்டல்' (Crystal) என்று சொல்லப்படும் மிகவும் பலம் வாய்ந்த கண்ணாடி போன்ற ஒரு முலப் பொருளினால் உருவாக்கப்பட்ட மண்டை ஓடு அது. 
இது பற்றி மேலும் சொல்ல வேண்டும் என்றால் 'கிறிஸ்டல்என்பது பற்றி நான்முதலில் கொஞ்சம் விளக்கிச் சொல்ல வேண்டும்கிறிஸ்டல் என்பது சாதாரணகண்ணாடியை விட வலிமை வாய்ந்தகடினமான ஒரு மூலப் பொருள்.கண்ணாடியிலும் கிறிஸ்டல் உருவாக்கப்படும் என்றாலும், 'குவார்ட்ஸ்' (Quartz)போன்ற பலம் வாய்ந்த மூலப் பொருள்களினாலும் அது அதிகம் உருவாக்கப்படுகிறது.இந்த வகைக் கிறிஸ்டலை வெட்டுவது என்பதுஇன்றைய காலத்திலேயேமிகக்கடினமானதுவைரம் போன்றவறால்தான் அதை வெட்ட முடியும்அல்லது நவீன'லேசர்' (Laser) தொழில் நுட்பத்தினால் வெட்டலாம்.
சரிமீண்டும் எங்கள் கிறிஸ்டல் மண்டையோட்டுக்கு வருவோமா!
'மிச்செல் ஹெட்ஜஸ்' (Mitchell-Hedges) என்பவர் 1940 களில் மிகவும் பிரபலமான ஒருபுதைபொருள் ஆராய்ச்சியாளராக இருந்தவர்அவரது வளர்ப்பு மகளின் பெயர் அன்னாஹெட்ஜெஸ் (Anna Hedges).  1924ம் ஆண்டு மிச்செல்மாயா இனத்தவர் வாழ்ந்தஇடங்களை ஆராய்வதற்காகலுபாண்டூன் (Lubaantun) என்னுமிடத்தில் அமைந்த மாயன் கோவிலுக்குச் சென்றார் (தற்போது பெலிட்ஸே (Belize) என்னும் நாடாக அது காணப்படுகிறது). அங்கே ஒரு பிரமிட்டின் அருகே அன்னாவின் காலடியில் இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு தட்டுப்பட்டது. அப்போது அன்னாவுக்கு வயது பதினேழு.  
அன்னாவினால் கண்டெடுக்கப்பட்ட அந்த மண்டை ஓடுதான் இது……!
அன்னாவால் கண்டெடுக்கப்பட்ட இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடு எத்தனை வருசம்பழமையானது தெரியுமா…? 5000  வருசங்களுக்கு மேல்அதாவது மாயன் இனத்தவர் வாழ்ந்த காலங்களுக்கு முந்தையது இந்த மண்டை ஓடு.  இந்தக் கிறிஸ்டல்மண்டை ஓடு மிக அழுத்தமாகஅழகாகவட்டவடிவமாக தேய்க்கப்பட்டுபளபளப்பாகசெதுக்கப் பட்டிருக்கிறதுஅன்றைய காலத்தில்ஒரு மாயன் ஒரு நாள் முழுவதும் இந்த மண்டை ஓட்டைச் செதுக்க ஆரம்பித்திருந்தால்அவனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலே இந்த மண்டை ஓட்டைச் செதுக்கி முடிக்க எடுத்திருக்கும்.அவ்வளவு துல்லியமாக செதுக்கப்பட்டிருந்தது அந்த மண்டை ஓடு. 
இந்த மண்டை ஓட்டை ஆராய்ந்த 'ஹூவ்லெட் பக்கார்ட்' (Hewlett Packard)நிறுவனத்தினர்குவார்ட்ஸ் (Quartz) வகைக் கிறிஸ்டலினால் இந்த மண்டை ஓடு செய்யப்பட்டிருப்பதாகவும்நுண்ணிய மைக்ரோஸ்கோப்களினாலேயே கண்டுபிடிக்க முடியாதபடி,  அது எப்படிச் செய்யப்பட்டதுஎந்த ஆயுதத்தினால் செய்யப்பட்டது என்று திணறும் அளவுக்குமிக நேர்த்தியாக செய்யப்பட்டும் இருக்கிறது என்று அறிக்கை கொடுத்தனர் 
எந்த ஒரு கருவியும் கண்டு பிடிக்கப்படாத காலத்தில்அவ்வளவு வலிமையான ஒருபதார்த்தத்தால் ஒரு மண்டை எப்படி உருவாக்கி இருப்பார்கள் மாயன்கள்இதுசாத்தியமான ஒன்றுதானாஇந்த மண்டை ஓட்டை ஆராய்ந்தவர்கள் சிலர்இதுலேசர் தொழில்நுட்ப முறையினால்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்என்கிறார்கள்காரணம் அதை உருவாக்கிய அடையாளம் அதில் எப்படிப் பபார்த்தாலும் தெரியவில்லலைலேசர் தொழில் நுட்பம் 5000 ஆண்டுக்கு முன்னால்இருந்தது என்றால் நீங்களே சிரிப்பீர்கள்அப்படி என்றால் இது எப்படிஇன்றுள்ளமனிதனால் கூடநவீன கருவிகள் இல்லாமல்  இப்படி ஒரு மண்டை ஓட்டைச்சாதாரணமாக உருவாக்க முடியாது.
இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடுகள் பற்றிய செய்தி இவ்வளவுதானா என்று கேட்டால்,நான் சொல்லும் பதிலால் நீங்கள் அதிர்ந்தே போய் விடுவீர்கள்அவ்வளவுமர்மங்களை அடக்கிருக்கிறது இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓடுஇந்தக் கிறிஸ்டல்மண்டை ஓடு கிடைத்ததற்கு அப்புறம்மாயன் சரித்திரத்தை இந்தத் திசையில்ஆராய்ந்தால் கொட்டுகிற செய்திகள் அனைத்துமே நாம் சிந்திக்க முடியாதவையாகஇருக்கின்றனஇது பற்றி மேலும் சொல்வது என்றால் சொல்லிக் கொண்டே போகலாம்என்னும் அளவுக்கு மிகப்பெரிய செய்திகளை அடக்கியது இந்த மண்டை ஓடு.   
இந்தக் கிறிஸ்டல் மண்டை ஓட்டை அடிப்படையாக வைத்து, 2008ம் ஆண்டு'இன்டியானா ஜோன்ஸ் அன்ட்  கிங்டொம் ஆஃப்  கிறிஸ்டல் ஸ்கல்' (Indiana Jones and the Kingdom of the Crystal Skull) என்னும் படம் வெளியானதுஇந்தப் படத்தில் பிரபலஹாலிவுட் நடிகர் ஹரிசன் போர்ட் (Harrision Ford) நடித்திருக்கிறார்அத்துடன் இந்தப்படத்தை இயக்கியவர் பிரபல இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg).
முடிந்தால் இந்தப் படத்தைப் பாருங்கள்இந்தப் படத்தில் வரும் பாத்திரம் என்பதுஉண்மையாகவே இருந்த ஒரு பாத்திரம்அவர்தான் மேலே நான் சொல்லியமிச்செல் ஹெட்ஜெஸ்.
இவ்வளவு ஆச்சரியம் வாய்ந்த மண்டை ஓடு மாயாக்களால் எப்படிச்சாத்தியமானது….?
குவார்ட்ஸ் என்னும் கனிமத்தை எப்படி மாயாக்கள் எடுத்தார்கள்…..?
அதை எப்படி மண்டை ஓடு போலச் செதுக்கினார்கள்…..?
மாயாக்கள் என்னமனிதனாலேயே சாத்தியமில்லாத ஒன்றல்லவா இது!
அப்படிப்பட்ட மண்டை ஓடு ஒன்றே ஒன்றுதானா....?
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு நடுவில்அன்னாவின் கிறிஸ்டல் மண்டை ஓட்டின் பின்னர்பலர் ஆராய்ச்சிக்குக் கிளம்பினார்கள். மேலதிக ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் இது போன்ற மண்டை ஓடுகள் வெவ்வேறு இடங்களில் இருப்பது தெரிந்ததுமொத்தமாக எட்டு கிரிஸ்டல் மண்டை ஓடுகள் அடுத்தடுத்துக் கண்டுபிடிக்கப்பட்டன. 
 அந்த எட்டு மண்டையோடுகளில் பெரும்பான்மையானவைகுவார்ட்ஸ் என்னும்கனிமத்தினாலும்சில 'அமெதிஸ்ட்' (Amethyst) என்னும் ஆபரணங்கள் செய்யும் ஒருவகை இரத்தினக் கல்லாலும் செய்யப்பட்டவையுமாகும்
அப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட எட்டு கிறிஸ்டல் மண்டை ஓடுகளும் இவைதான்.
மேலும் மாயன் சரித்திரங்களை ஆராய்ந்தபோதுஇப்படிப்பட்ட மண்டை ஓடுகள்மொத்தமாக பதின்மூன்று இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் அறிந்துகொண்டார்கள்அப்படி என்றால் இந்தப் பதின்மூன்று மண்டை ஓடுகள் இருப்பதற்குஒரு காரணம் இருக்கிறதாஅப்படி இருந்தால்அந்தக் காரணம் என்ன….? மிகுதி ஐந்துமண்டை ஓடுகளும் எங்கே போயினஅவை கிடைத்தால் எமக்கு ஏதாவது நன்மைகள்உண்டா?
இந்தக் கேள்விகளின் பதில்களோடும்மேலும் பல மர்மங்களோடும் அடுத்த தொடரில்சந்திக்கலாம்.