Friday, May 25, 2012

2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்

Source: Collection from http://www.uyirmmai.com/
Author:Raj siva


இன்னும் ஒரிரு மாதங்களில், 2012ம் ஆண்டு புதுவருடமாகப் பிறக்கப் போகிறதுஇந்த நேரத்தில்பலர் பயத்துடன் பார்க்கும் ஒன்று உண்டென்றால்அது '2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறதுஎன்ற விந்தையான செய்திக்கு உலக ஊடகங்கள் பல கொடுக்கும் முக்கியத்துவம்தான்.
"சரியாக இன்னும் ஒரு வருடத்தில் உலகம் அழியப் போகிறதா?" என்பதே பலரின் கேள்வியாகவும், பயமாகவும் இருக்கிறது.
இது பற்றி அறிவியலாகவும்அறிவியலற்றதாகவும் பலவித கருத்துக்களும்,ஆராய்ச்சிகளும் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கிறதுஅப்படி இந்த அழிவை ஏன் முக்கியப்படுத்த வேண்டும் என்று பார்த்தால்எல்லாரும் சுட்டிக் காட்டுவது ஒன்றைத்தான்.
அது….! 'மாயா'.
மாயா இனத்தவர்களுக்கும், 2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என்பதற்கும் என்ன சம்பந்தம்இவர்கள் இந்த அழிவு பற்றி ஏதாவது சொன்னார்களாஅப்படிச் சொல்லியிருந்தால்என்னதான் சொல்லியிருப்பார்கள்அதை ஏன் நாம் நம்ப வேண்டும்இப்படிப் பல கேள்விகள் எமக்குத் தோன்றலாம்.
இது போன்ற பல கேள்விகளுக்கு ஒரு விரிவான ஆராய்ச்சித் தொடர் மூலம் உங்களுக்குத் பதில் தரலாம் என்ற நினைத்தே உங்கள் முன் இந்தத் தொடரைச் சமர்ப்பிக்கிறேன்.
என்ன என்பது இது பற்றி விளக்கமாகப் பார்க்கலாமா…..?
உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் வீட்டில் வசித்த அனைவரும்ஒருநாள் திடீரென அந்த வீட்டிலிருந்துஅவர்கள் இருந்த சுவடே இல்லாமல் மறைந்தால் என்ன முடிவுக்கு வருவீர்கள்திகைத்துப் போய்விட மாட்டீர்களாஆச்சரியத்துக்கும்,மர்மத்துக்கும் உள்ளாகுவீர்கள் அல்லவா?
சரிஅதுவே ஒரு வீடாக இல்லாமல்உங்கள் வீடு இருக்கும் தெருவுக்குப் பக்கத்துத் தெருவே திடீரென ஒரே இரவில் மறைந்தால்….? ஒரு தெருவுக்கே இப்படி என்றால்,ஒரு ஊர் மக்கள் மறைந்தால்….? ஒரு நாட்டு மக்கள் மறைந்தால்….?
ஆம்....! வரலாற்றில் இது நடந்ததுஒரு நாட்டில் வாழ்ந்தமிக மிக மிகச் சிறிய அளவினரை விடமற்ற அனைத்து மக்களும்திடீரென அந்த நாட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக மறைந்துவிட்டார்கள்சரித்திரத்தில் எந்த ஒரு அடையாளங்களையும்மறைந்ததற்குச் சாட்சிகளாக வைக்காமல் மறைந்து போனார்கள்.
ஏன் மறைந்தார்கள்எப்படி மறைந்தார்கள்என்னும் கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களை மட்டுமே மிச்சம் வைத்துவிட்டுமாயமாய் மறைந்து போனார்கள்எங்கே போனார்கள்எப்படிப் போனார்கள்யாருக்கும் தெரியவில்லைஎதுவும் புரியவில்லை.
இந்த மறைவின் மர்மத்தை ஆராயஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்தது எல்லாமே ஒரு மாபெரும் அதிர்ச்சிகள்.மாயாக்கள் விட்டுச் சென்ற சுவடுகளை ஆராய்ந்த அவர்கள் பிரமிப்பின் உச்சிக்கே போனார்கள்.
அறிவியல் வளரத் தொடங்கிய காலகட்டங்களில்இவை உண்மையாக இருக்கவே முடியாதுஎன்னும் எண்ணம் அவர்களுக்குத் தோன்றும்படியான பல ஆச்சரியங்களுக்கான ஆதாரங்கள் கிடைத்தனஅவை அவர்களை மீண்டும் மீண்டும் திக்குமுக்காடச் செய்தது.
இது சாத்தியமே இல்லாத ஒன்றுஇதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என அறிஞர்கள் சிலர் பிரமிக்கபலர் பின்வாங்கத் தொடங்கினார்கள்.
மாயா என்றாலே மர்மம்தானாஎன நினைக்க வைத்தது அவர்கள் கண்டுபிடித்தவை.
சரிஅப்படி என்னதான் நடந்ததுஆராய்ச்சியாளர்கள் அப்படி எதைத்தான் கண்டு கொண்டார்கள்ஆராய்ந்த சுவடுகளில் அப்படி என்னதான் இருந்தது?
இவற்றையெல்லாம் படிப்படியாக நாம் பார்க்கலாம்ஒன்று விடாமல் பார்க்கலாம்.அவற்றை நீங்கள் அறிந்து கொண்டால்இதுவரை பார்த்திராதகேட்டிராத,ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போய்விடுவீர்கள்.
அவை என்ன என்பதை அடுத்து நாம் பார்ப்போமா……..!

முற்குறிப்பு: நான் எழுதப் போகும் மாயா பற்றிய இந்தத் தொடர் பற்றி,உங்களுக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்வேறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்கலாம்அவற்றை எல்லாம்எடுத்த எடுப்பிலேயே மறுக்க வேண்டும் என்று தயவுசெய்து உடன் மறுக்க வேண்டாம்இந்தத் தொடரை நான் முடிக்கும் வரை பொறுத்திருங்கள்பலருக்கு இது பகுத்தறிவுக்கு ஒத்துவராதஅறிவியல் ஒத்துக் கொள்ளாத சம்பவங்களாக இருக்கும்உண்மைதான்நானும் உங்களைப் போன்ற அறிவியலை நம்பும் ஒருவன்தான்எனவே முடிவு வரை பொறுத்துக் கொண்டு,இதை வாசியுங்கள்.
கடந்த தொடரில்சுவடே இல்லாமல் ஒரு இனம் எப்படி அழிந்திருக்கலாம் என மாயாக்கள் வாழ்ந்த இடங்களை ஆராயச் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைத்தது ஒரு மாபெரும் அதிர்ச்சிமாயாக்கள் விட்டுச் சென்ற கல்வெட்டுகளை ஆராய்ந்த அவர்களை பிரமிப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது அது.
சரிஅப்படி என்னதான் நடந்ததுஅங்கு என்னதான் இருந்தது? என்ற கேள்வியுடன் கடந்த பதிவில் விடைபெற்றோம் அல்லவா..?
அதை உங்களுக்கு விளக்குவதற்கு முன்னர்வேறு ஒரு தளத்தில் நடந்தவேறு ஒரு சம்பவத்துடன் இன்றைய தொடரை ஆரம்பிக்கிறேன்இப்போது சொல்லப் போகும் இந்தச் சம்பவத்துக்கும்மாயாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.ஆனாலும் வேறு வகையில் சம்பந்தம் உண்டு.
இராஜராஜ சோழன் என்னும் மாபெரும் தமிழ் மன்னனை யாரும் மறந்திருக்க மாட்டோம்தமிழ்நாட்டில் கி.பி985ம் ஆண்டு முதல் கி.பி1012 ஆண்டு வரை தஞ்சையை தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சோழ மன்னன்தான் இராஜராஜன்.
இன்றும் உலகம் தமிழனைத் திரும்பிப் பார்க்கும் வண்ணம்அவன் உலக அதிசயங்களுக்கு நிகரான ஒரு அழியாச் சின்னத்தைக் கட்டினான்அதுதான் தஞ்சையில் அமைந்துள்ள, 'தஞ்சைப் பெரிய கோவில்என்றழைக்கப்படும் பிரமாண்டமான கோவில்.
அதன் மிகப் பிரமாண்டமான இராஜகோபுரம் மிகவும் அழகான கலை நயத்துடன் கட்டப்பட்டதுஅதில் யாருமே எதிர்பார்க்காத விசேசம் ஒன்று இருந்ததுதான் இங்கு நான் ராஜராஜ சோழனை இழுப்பதற்குக் காரணம்.
ஆம்அந்தக் கோபுரத்தில் காணப்பட்ட ஒரு உருவச் சிலை எல்லாரையும் புருவத்தை உயர்த்த வைத்ததுஒரு இந்துக் கோவில் கோபுரத்தில் இது சாத்தியமாஎன்னும் கேள்விகள் ஒலிக்கும் வகையில் இருந்தது அந்த உருவச் சிலைகோபுரங்களில் இந்துக்களின் நாகரீகங்களையும்கலைகளையும்,தெய்வங்களையும் சிலைகளாக வடிப்பதுதான் நாம் இதுவரை பார்த்தது.
ஆனால் இது........! அப்படி அந்தக் கோபுரத்தில் இருந்த உருவச் சிலை என்ன தெரியுமா....?
ஒரு மேலைத் தேச நாட்டவன்தலையில் தொப்பியுடன் காணப்படுகிறான்.தஞ்சை மன்னனுக்கும் இந்துக்களின் ஆச்சாரத்துக்கும் ஏற்பே இல்லாத் தன்மையுடன் அந்தச் சிலை பெரிதாகக் காட்சியளிக்கிறது.
அந்தப் படம் இதுதான்........!
"முழங்காலுக்கும் மொட்டைதலைக்கும் முடிச்சுப் போடுவது போலஎன்று சொல்வார்களேஅது போல இந்த மேலைத்தேச மனிதனின் சிலைபாரம்பரியமிக்க இந்துக்களின் கோபுரத்தில் அமைந்திருக்கிறது என்றால்அதற்கென ஒரு காரணம் நிச்சயமாக இருந்தே தீருமல்லவா...?
இராஜராஜ சோழனின் காலத்தில் யவனர்களாக வந்துஎமது கோவிலிலேயே உருவமாக அமைவதற்குஅந்த மேற்குலகத்தவனுக்கு வரலாற்றில் பதிவாகாத வலுவான காரணம் ஒன்று இருந்திருக்கும் அல்லவா…?
ஆனால்அதை ஆராய்வதல்ல இப்போது எங்கள் வேலை.
சம்பந்தமே இல்லாத இடத்தில்சம்பந்தமே இல்லாதவர்கள் தொடர்புபட்டிருப்பார்கள் என்பதற்கு எம்முள்ளேயே இருக்கும் சாட்சிதான் இது.இந்தச் சம்பவம் போலத்தான் மாயா சமூகத்தை ஆராய்ந்த ஆய்வாளர்களுக்கும் சம்பந்தமே இல்லாத வடிவங்களில் ஆச்சரியம் காத்திருந்தது.
அந்த ஆச்சரியமும் முடிச்சுப் போட முடியாத மூச்சை அடைக்கும் ஆச்சரியம்தான்தஞ்சையில் யவனன் இருந்தது ஒன்றும் பெரிய விசயம் இல்லைஆனால் மாயா இனத்தில் இருந்தவை திகைக்க வைத்தது.
அவை என்ன தெரியுமா……..?
மாயாக்களின் கல்வெட்டுகளை ஆராய்ந்தபோது அங்கு கிடைத்த சித்திரங்களிலும்,சிலைகளிலும் வித விதமாக அயல்கிரக வாசிகளின் உருவங்கள்தான் காணப்பட்டன.
அட….! இதுவரை இந்த மனிதன் நல்லாத்தான் பேசிக் கொண்டிருந்தார்இப்ப என்ன ஆச்சு இவருக்கு என்று நீங்கள் நினைப்பது புரிகிறதுஆனால் அது உண்மை என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகவும் இருந்தது.
என்ன இது புதுக்கதையாக இருக்கிறதே என்பீர்கள்.
உண்மைதான்புதுக்கதைதான்புதுக்கதை மட்டும் அல்லபுதிர்க்கதையும் கூட.எனவே அவை பற்றி நிறைய எழுத வேண்டும்அதனால் முதலில் முன்னோட்டமாக மாயாக்களிடம் கண்டெடுத்த ஒரு படத்தைப் போடுகிறேன் நீங்களே பாருங்கள்.
ஏதாவது தெரிகிறதாஅல்லது புரிகிறதா…?
நவீன யுகத்தினர் விண்ணுக்கு அனுப்பிய ராக்கெட்டின் வடிவை ஒத்ததும்அந்த ராக்கெட்டை இயக்கும் ஒரு மனிதன் சாய்ந்த நிலையில் அமர்ந்திருக்கும் அமைப்பிலும் ஒரு சித்திரம் கண்டெடுக்கப்பட்டதுஅது சதுர வடிவிலான கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறதுஒரு மனிதன் சாதாரணமாக அப்படி அமர்ந்திருக்க எந்த ஒரு தேவையும் இல்லாத விதத்தில் அமைந்த சித்திரம் அது.
மாயன் வாழ்ந்த இடங்களில் அமைந்த பிரமிடுகளுக்கள் ஒன்றில் அமைந்திருந்த சுரங்கத்தில் அவர்களின் அரசன் ஒருவன் புதைக்கப்படிருக்கிறான்அந்த அரசனின் உடலை வைத்து மூடிய இடத்தில் இந்தச் சித்திரம் கண்டெடுக்கப்பட்டதுஇந்தச் சித்திரத்தில் இருப்பது மாயன்களின் அரசனாக இருப்பதற்கும் சான்றுகள் உண்டு என்றாலும்அந்தச் சித்திரம் ஏன் அப்படி வரையப்பட்டிருக்கிறது என்பது மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
சரிஇது தற்செயலாக நடந்த ஒன்றாக இருக்கலாம் அல்லது இந்தச் சித்திரம் வேறு எதையோ குறிக்கலாம் என்று ஒதுங்கப் போனவர்களுக்குஅவற்றுடன் கிடைத்த வேறு பல பொருட்கள் சந்தேகங்களை மேலும் வலுவடையச் செய்தது.
அப்படி என்னதான் கிடைத்தன..?
அதை அடுத்த தொடரில் பார்க்கலாம்……!


"கடந்த தொடரில் ஏதோ ஒரு படத்தைப் போட்டுவிட்டு, அந்தப் படத்துக்கும், ராக்கெட்டுக்கும் (Rocket) சம்பந்தம் இருப்பதாகச் சொல்வதை எல்லாம் நாம் எப்படி நம்புவது? சொல்லப் போனால் அந்தப் படத்தில் இருப்பது ஏதோ ஒரு விதமான சித்திரம் அவ்வளவுதான்" என்று நீங்கள் நினைப்பீர்கள். அதில் தவறும் இல்லை. நானும் ஆரம்பத்தில் அப்படியேதான் நினைத்தேன், மாயா மக்களை முழுமையாக அறியும் வரை.

அந்தச் சித்திரத்தை மிகச் சரியாக உற்று நோக்கிப் பாருங்கள். அதில் ஒரு ஒழுங்கு முறையையும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இல்லாத அமைப்பையும், காட்சியையும் அது கொண்டிருப்பது, நிச்சயம் எமக்குத் தெரிகிறது. எதுவுமே இல்லாத ஒரு காலத்தில், எதையும் பார்க்காத ஒன்றை வைத்து இப்படி ஒரு  கலை வடிவைப் படைக்கும் சாத்தியம் அக்காலங்களில் இருந்ததாகத் தெரியவில்லை. அத்துடன் இந்தச் சித்திரம் மாயன்களால் கட்டப்பட்ட 'பிரமிட்' (Pyramid) வடிவக் கட்டடங்களுக்குக் கீழே இருந்த ஒரு சுரங்கத்தில், பாதுகாப்பாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது  (இந்தப் பிரமிட்டுகள்தான் எமக்கு மாயன்கள் பற்றிய ஆச்சரியங்களைப் பின்னர் கொடுக்கப் போகின்றன).


அந்தச் சித்திரம் கண்டெடுக்கப்பட்ட பிரமிட்டை மேலேயும், அதன் சுரங்கவழியைக் கீழேயும் தந்திருக்கிறேன். இதைப் பார்க்கும்போது, மாயாக்கள் இந்தச் சித்திரத்துக்குக் கொடுத்த முக்கியத்துவம் உங்களுக்குப் புரியும்.


"அதெல்லாம் சரிதான். இது ஒன்றை வைத்துக் கொண்டு மாயாக்களுக்கும், ராக்கெட்டுக்கும் சம்பந்தம் உண்டு என்று, எப்படி முடிவெடிக்க முடியும்" என்னும் கேள்வி சுலபமாக எமக்குத் தோன்றுவது இயல்புதான். ராக்கெட்டுடன் சம்பந்தம் என்றால், அப்புறம் விண்வெளிதானே! இதற்கெல்லாம் சாத்தியம் என்பதே கிடையாது என்று அடித்துச் சொல்லும் உங்கள் மனது.
அதனால் மாயன்கள் வாழ்ந்த இடங்களில் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்த இவற்றை முதலில் பாருங்கள். நவீன வின்வெளிப் பிரயாணியின் படத்துக்கும், மாயாக்களின் மற்ற இரண்டு படங்களுக்கும் உள்ள தொடர்பை ஒப்பிட்டுப் பாருங்கள்.

இத்துடன் இவை முடிந்து விடவில்லை. மாயன்களின் ஆச்சரியங்கள் எம்மைத் தொடர்ந்தே தாக்குகின்றன. அந்த ஆச்சரியங்களை நான் சொற்களால் வடிப்பதை விடப் படங்களாகவே உங்களுக்குத் தந்தால்தான், அதிகமான விளக்கங்கள் உருவாகும்.
'ஆயிரம் வார்த்தைகள் சொல்லும் கருத்தை ஒரு காட்சி சொல்லிவிடும்' என்பார்கள். அதனால் உங்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக, நான் படங்களைத்தான் இனி அதிகமாகத் தரலாம் என நினைக்கிறேன்.
மாயன் கட்டடங்களை மேலும் ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் மாயன் பிரதேசமான மத்திய அமெரிக்காவில், அடுத்ததாக ஒன்றைக் கண்டதும் வெலவெலத்தே போய்விட்டனர். அவர்கள் ஏன் வெலவெலத்தனர் என்று நீங்கள் நினைக்கலாம். அவர்கள் எதைக் கண்டெடுத்தார்கள் என்பதை நீங்களே பாருங்கள்.


இந்தப் படத்தைத் தனியாகப் பார்த்தால் உங்களுக்குப் புரிவதற்கு சற்றுக் கடினமாக இருக்கலாம். எனவே, ஒரு நவீன விண்கலத்தில் நெருப்பைக் கக்கும் கீழ்ப்பகுதியையும், இந்தப் பொருளையும் சற்று ஒப்பிட்டுத்தான் பாருங்கள்.


இவற்றையும் தற்செயலென்றே நாம் வைத்துக் கொள்வோம். மாயன் சமூகத்தினர் எதையோ செய்து வைத்திருக்க, நான் அதை ராக்கட்டுடன் (Rocket) ஒப்பிட்டு சும்மா தேவையில்லாமல் பீதியைக் கிளப்புகின்றேன், அறிவியல் பற்றிப் பேசுவதாகச் சொல்லிவிட்டு ஒட்டுமொத்தமாக மூட நம்பிக்கையை வளர்க்கிறேன் என்றே வைத்துக் கொள்வோம்.
ஆனால் அடுத்து அகப்பட்டவை, எல்லாவற்றையும் அடியோடு தூக்கிச் சாப்பிட்டது. அதைப் பார்ததும் நான் சொல்வதில் ஏதும் உண்மை இருக்கலாமோ என்றும் நீங்கள் நினைப்பீர்கள். ராக்கெட்டைப் படமாக வரைந்திருப்பவர்கள் அதில் பயணம் செய்தவர்களையும் படமாக வரைந்துதானே இருக்க வேண்டும்.  இப்போது இந்தப் படங்களையும்  பாருங்கள்.
இது ஒரு தற்கால, விண்வெளிக்குச் செல்லும் நவீன மனிதனின் படம்.


இவை மாயன்களிடம் இருந்து பெறப்பட்ட வடிவங்கள்............!


இதற்கு மேலும் நான் இந்த விண்வெளி உடை போன்ற தோற்றத்துடன் படம் போடத் தேவையே இல்லை என்றே நினைக்கிறேன். இந்தப் படங்களே உங்களுக்குப் பல செய்திகளை விளக்கியிருக்கும்.
 மாயா சமூகத்தினரின் கலாச்சாரத்தை ஆராயும்போது  கிடைத்த ஓவியங்கள், சிலைகள் போன்றவற்றில், நவீன விண்வெளி ஆராய்ச்சி சம்பந்தமான பலவற்றைக் காணக் கூடியதாக இருந்தது என்னவோ உண்மை. அவை உண்மையிலேயே விண்வெளி சம்பந்தமானவைதானா? அல்லது வேறு அர்த்தங்கள் உள்ளனவா  என்னும் கேள்வி தொடர்ந்து எமக்குத் தோன்றுவதில் ஆச்சரியமில்லை. ஆனாலும் இது விண்வெளி சம்பந்தமானதுதான் என்றால்,  அதற்கு இதுவரை நான் கொடுத்த சாட்சியங்கள் போதுமானவைதானா?
அட, எப்பவும் விண்வெளி உடையிலேயே இருக்கிறீர்களே, வேறு எதுவுமேயில்லையா? என்கிறீர்களா!
சரி, இப்பொழுது இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, இது எப்படிச் சாத்தியம் என்று சொல்லுங்கள். இவை எதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்ல முடிகிறதா...?பறவைகளா? பூச்சிகளா? இல்லை மீன்களா?
அல்லது................!
ஆகாய விமானங்களா....?
நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்........!
பூச்சிகள், பறவைகள், மீன்கள் என்றால், அந்த நடுவே இருக்கும் உருவத்தில், எப்படிக் காற்றாடி போன்ற அமைப்பு வந்தது?
என்ன தலை சுற்றுகிறதா.....?  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட, தங்கத்தினால் செய்யப்பட்ட இந்த  உருவங்கள் சொல்லும் உண்மைகளை நாம் தாங்கிக் கொள்ள வேண்டும் என்றால், மேலும் பல உண்மைகளைத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். அந்த உண்மைகள் இவற்றை விடக் கனமானவை.
அந்த உண்மைகளைப் பற்றி அடுத்துப் பார்ப்போம்...........!

No comments:

Post a Comment