Saturday, September 28, 2013

முக்கிய நகரங்கள்: விலை நிலவரங்கள்... தமிழக 'ரியல்’ விசிட்!

From Nanayam Vikatan..

நாணயம் விகடன் ரியல் எஸ்டேட் சிறப்பிதழுக்காக தமிழ்நாடு முழுக்க மனை விலை நிலவரங்கள் எப்படி இருக்கிறது என்பதை அறிய களமிறங்கினோம். நாம் சுற்றிப் பார்த்த அனைத்து ஊர்களிலும் கடந்த ஒரு வருடமாக ரியல் எஸ்டேட் பெரிய வளர்ச்சி காணவில்லை என்பது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் உண்மை. இதற்கு என்ன காரணம், நிலைமை எப்போது சீரடையும் என விசாரித்தபோது ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், புரோக்கர்கள் எல்லோருமே ஒருமித்த குரலில் தங்களது வருத்தங்களைப் பதிவு செய்தனர்.
''வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டதன் காரணமாக முதலீட்டு நோக்கில் மனைகள் வாங்குவது குறைந்துவிட்டது. சந்தை மதிப்பு உயர்வாக இருந்து அரசு வழிகாட்டி மதிப்பு குறைவாக இருந்தபோது பத்திரப்பதிவு செலவும் மக்களுக்கு சகாயமாக இருந்தது. தற்போது மனையின் விலையும் அதிகம்; பத்திரப்பதிவுக்கு ஆகும் செலவும் அதிகம் என்கிறபோது இடம் வாங்க பலரும் யோசிக்கவே செய்கின்றனர்'' என்றார்கள் புரோக்கர்கள்.
உடனடி வீடு கட்ட சாத்தியமுள்ள மனைப் பிரிவுகள் மட்டுமே தற்போது விற்பனையாகிறது. முதலீட்டு நோக்கில் புறநகர்ப் பகுதிகளில் போடப்பட்டுள்ள மனைகள் எல்லாமே தற்போது தேக்கத்தில்தான் உள்ளது என்கின்றனர்.
இப்போதுள்ள நிலை அப்படியே நீடித்தால் விலை இறங்க வாய்ப்புள்ளதா என்றால் அதற்கும் சாத்தியமில்லை. ஏற்கெனவே முதலீட்டு நோக்கில் வாங்கியவர்கள் விலை குறைத்துத் தர தயாராக இல்லை. அதேநேரத்தில், விறுவிறுப்பு இல்லாத காரணத்தால் சொல்கிற விலைக்கு வாங்குவதற்கு ஆட்களும் தயாராக இல்லை என்கின்றனர். மொத்தத்தில் வாங்குவதற்கும் விற்பதற்கும் ஆளில்லாமல் எந்த ஆக்ஷனும் இல்லாமல் இருக்கிறது தமிழக ரியல் எஸ்டேட் தொழில். இனி ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் 'ரியல்’ நிலவரங்களைப் பார்ப்போம்.
சென்னை!  
பெருநகரத்தின் தேவைக்கு ஏற்ப சென்னையின் ரியல் எஸ்டேட் மூவிங் உள்ளது. ஆனால், கைடுலைன் வேல்யூ அதிகரித்த பிறகு விற்பனையில் கொஞ்சம் தேக்கம் அடைந்துள்ளது. அதேபோல ஃப்ளாட் விற்பனையிலும் தேக்கம் நிலவுவதாகச் சொல்கின்றனர். வீடோ, மனையோ புறநகர்ப் பகுதிகள் நடுத்தர மக்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.
 விலை நிலவரம்:
(மனை சதுர அடி, விலை ரூபாயில்)
 வண்டலூர் 2,500 - 4,000
 ஊரப்பாக்கம் 2,000 - 2,500
 மறைமலைநகர் 2,000 - 2,500
 திருநின்றவூர் 600 - 1,000
 திருமழிசை 600 - 1,200
 பூந்தமல்லி 800 - 1,500
 ஒரகடம் 400 - 500
 செங்குன்றம் 600 - 1,500
 அடுக்குமாடி வீடுகள் (சதுர அடி, விலை ரூபாயில்)
  வண்டலூர் 3,800 - 5,500
 சோழிங்கநல்லூர் 4,000 - 4,500
 பெருங்குடி 4,000 - 4,500  
 ஒரகடம் 3,000 - 4,500
 மறைமலைநகர் 3,000 - 3,500
 ஆவடி 2,600 - 3,500
 அம்பத்தூர் 2,700 - 3,800
 பூந்தமல்லி 2,800 - 3,200
 குன்றத்தூர் 2,800 - 3,200
 வேலூர்!
கடந்த பத்து வருடங்களில் வேலூர் அதிக மாற்றங்களைச் சந்தித்துள்ளது. இந்த மாற்றங்களுக்கு சென்னை - பெங்களூரு பைபாஸ் சாலை மிக முக்கிய காரணம். இது ரியல் எஸ்டேட் துறையிலும் எதிரொலிக்கிறது. ஆனால், இரண்டு வருடங்களுக்கு முன் இருந்த வேகம் இப்போது இல்லை. தேவைக்கு மட்டுமே இடம் கைமாறுகிறது. சத்துவாச்சாரி முதல் ரத்னகிரி வரை உடனடியாக வீடு கட்ட தோதாக மனைகள் இருக்கின்றன. ஃப்ளாட்கள் பெரிதாக இன்னும் புழக்கத்திற்கு வரவில்லை.
 விலை நிலவரம்: (மனை சதுர அடி, விலை ரூபாயில்)
 சத்துவாச்சாரி 400 - 2,000
 ரங்காபுரம் 500 - 2,500
 ஆட்டோ நகர் 800 - 1,000  
 காந்தி நகர் 1,000 - 2,000
 அடுக்கம்பாறை 300 - 450
 தொரப்பாடி 400 - 600
 அரியூர் 250 - 800
சேலம்!
சேலம் ரியல் எஸ்டேட் நிலவரம் தற்போது ஆவரேஜ்தான். தாரமங்கலம் சாலை, அடிவாரம் பகுதிகள் மக்கள் விரும்பும் இடங்களாக உள்ளது. இதுதவிர, ஓமலூர், கமலாபுரம் பகுதிகளில் ஓரளவு மூவிங் உள்ளதாகச் சொல்கின்றனர். கோவை புறவழிச்சாலையும் ஓரளவு வளர்ச்சிகண்டு வருகிறது. முன்பு ஒரு வாரத்திற்கு இரண்டு, மூன்று இடங்களையாவது முடிப்போம்.  இப்போது வாரத்திற்கு  ஓர் இடம் முடிப்பதற்கே அலையவேண்டியிருக்கிறது என்கின்றனர் புரோக்கர்கள். புரோக்கர்களின் ஆதிக்கம் குறைந்திருப்பதாகவும், அதன்காரணமாக விலை ஏற்றம் மட்டுப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
 விலை நிலவரம்: (மனை சதுர அடி, விலை ரூபாயில்)
 ஓமலூர் 1,000 - 1,500
 மகுடன்சாவடி 1,000 - 2,000
 அயோத்திபட்டினம் 1,000 - 1,500
 தாரமங்கலம் சாலை 1,000 - 1,500
 காளிப்பட்டி 1,000 - 1,500
 விநாயகா மிஷன் 4,000 - 4,500
 ஓசூர்!
மனை தேவைகள் எப்போதும் இருந்து கொண்டிருக்கும் நகரங்களில் ஒன்று ஓசூர். பக்கத்தில் இருக்கிற  பெங்களூரு நகரத்திற்கு ஈடாக வளர்ந்து வருவதால் ரியல் எஸ்டேட் தொழிலும் சிக்கல் இல்லாமல் இருக்கிறது. குடியிருப்பதற்கு ஏற்ப வசதியான மனைகள் குறைவாக இருப்பதும் இன்னொரு காரணம்.  மத்திகிரி, அத்திப்பள்ளி சாலை, பாகலூர் போன்ற பகுதிகள் இப்போதும் மக்களின் குடியிருப்பு தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. தனிமனைகள் தவிர, 30 லட்சம் முதல் வசதிக்கு ஏற்ப டவுன்ஷிப் வீடுகளும் ஓசூரில் தாராளமாகக் கிடைக்கும்.
 விலை நிலவரம்: (மனை சென்ட் கணக்கில், விலை ரூபாயில்)
 மத்திகிரி 2 - 5 லட்சம்
 டைட்டன் சிட்டி 2 - 4 லட்சம்
 டி.வி.எஸ். 4 - 5 லட்சம்
 பாகலூர் சாலை 1.5 - 3 லட்சம்
 பதனபள்ளி 4 - 5 லட்சம்
 மூக்கண்ட பள்ளி 3 - 5 லட்சம்
 ஈரோடு!
பைபாஸ் வருது, பஸ் ஸ்டாண்ட் வருது என்றே இடத்தை விற்றார்கள். பஸ் ஸ்டாண்டும் வரவில்லை. பைபாஸ் ரோடு வந்தும் பயனில்லை என்பதுதான் இன்றைய நிலைமை. ஆனால், எவ்வளவு விலை ஏறினாலும் பெருந்துறை வழியில் உள்ள ஈர்ப்பு மட்டும் மக்களுக்கு குறைந்தபாடில்லை. தற்போதைய நிலவரப்படி ஈரோட்டின் ஹாட்ஸ்பாட் திண்டல்தான். லக்காபுரம் பகுதியை நடுத்தர மக்கள் கவனிக்கலாம்.
விலை நிலவரம்: (மனை சதுர அடியில், விலை ரூபாயில்)
 திண்டல் 2,000 - 4,000
 பள்ளிப்பாளையம் 500 - 800
 கொல்லம்பாளையம் 400 - 800
 லக்காபுரம் 1,000 - 2,000
 சாவடிப்பாளையம் 300 - 600
 கோவை!
கோவை ரியல் எஸ்டேட் சத்தமில்லாமல் அமைதியாக இருக்கிறது. என்றாலும், புதிய மனைப் பிரிவுகளும், விளம்பரங்களும் குறைந்தபாடில்லை. சூலூர், மேட்டுப்பாளையம், காரமடை, துடியலூர் என புறநகரப் பகுதி களிலும் உடனடி வீடு கட்ட மனைப் பார்க்கலாம். வடவள்ளி, தொண்டாமுத்தூர் பகுதிகளும் உடனடியாக வீடு கட்ட தோதான பகுதிகள் என்றாலும், விலை நிலவரம் ஆச்சர்யமூட்டும். ஃப்ளாட்களின் விற்பனை மிகவும் மந்தமாக இருக்கிறது.
 விலை நிலவரம்: (மனை சென்ட் கணக்கில், விலை ரூபாயில்)
 சின்னியம்பாளையம் 6 - 10 லட்சம்
 வடவள்ளி 4 - 7 லட்சம்
 துடியலூர் 2.5 - 4 லட்சம்
 ஒண்டிப்புதூர் 5 - 6 லட்சம்
 பாப்பம்பட்டி 3 - 4 லட்சம்
 காரமடை 2 - 4 லட்சம்
 மேட்டுப்பாளையம் 2 - 4 லட்சம்
அடுக்குமாடிக் குடியிருப்பு: (சதுர அடி விலை ரூபாயில்)
 சரவணம்பட்டி 2,500 - 3,500
 விளாங்குறிச்சி 2,500 - 3,500
 குரும்பாளையம் 2,000 - 2,500
 திருச்சி!
விரிவடையும் நகரத்தின் தேவைக்கு ஏற்ப ரியல் எஸ்டேட் நிலவரம் ஆவரேஜாக இருக்கிறது. சென்னை வழியில் சமயபுரம் பகுதிகள், வயலூர் சாலை, தஞ்சை வழியில் துவாக்குடி வரை என நகரத்தின் நான்கு திசைகளிலும் நகர விரிவாக்கம் உள்ளது. அடுக்குமாடி வீடுகளும் திருச்சியில் வளர்ந்து வருவது சாதகமான விஷயம்.
விலை நிலவரம்: (மனை சதுர அடியில், விலை ரூபாயில்)
 திருவானைக்காவல் 1,000 - 2,500
 ஏர்போர்ட் 1,000 - 1,500
 பசுமை நகர் 1,000 - 1,500
 அரியமங்கலம் 1,200 - 200
 துவாக்குடி 600 - 800
 அடுக்குமாடிக் குடியிருப்பு (சதுர அடி விலை ரூபாயில்)
 ஸ்ரீரங்கம் 3,700 - 4,200
 திருவானைக்காவல் 3,500 - 4,000
 எடமலைப்பட்டி புதூர் 3,000 - 3,500
 பால்பண்ணை 2,800 - 4,000
தஞ்சாவூர்!
கடந்த இரண்டு வருடங்களாக சரியான விவசாய உற்பத்தியில்லை. இதனால் மக்களிடம் பணப்புழக்கம் இல்லை. மேலும், தஞ்சாவூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப் படலாம் என்கிற எதிர்பார்ப்பும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நீடிக்கிறது. மருத்துவக் கல்லூரி, வல்லம் சாலை, புதிய பேருந்து நிலையப் பகுதிகள், நாஞ்சிக்கோட்டை சாலை என நகரத்தை ஒட்டிய பகுதிகளில்தான் குடியிருப்புகள் வளர்ந்து வருகிறது. உடனடியாக வீடு கட்ட பள்ளியக்ரஹாரம் பகுதியைத் தேர்ந்தெடுக்கலாம்.
 விலை நிலவரம்: (மனை சதுர அடியில், விலை ரூபாயில்)
 நாஞ்சிக்கோட்டை சாலை 300 - 500
 மேலவஸ்தாசாவடி 600 - 1,000
 ரெட்டிபாளையம் 500 - 700
 பள்ளியக்ரஹாரம் 250 - 700
 வல்லம் 300 - 500
 கீழவஸ்தாசாவடி 250 - 500
மதுரை!
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை ரியல் எஸ்டேட் தொழில் உச்சத்தில் இருந்த மதுரையில்,  இப்போதைய நிலவரப்படி புதிய மனைப் பிரிவுகள் எதுவும் புதிதாக முளைக்கவில்லை. பழைய மனைப் பிரிவுகளில் ரீசேல் என்கிற வகையில் உள்ளது என்றாலும் முதலீட்டு நோக்கம் வெகுவாக குறைந்துள்ளது. நாகமலை புதுக்கோட்டை, நத்தம் சாலை, ஒத்தகடை, திருமங்கலம் என புறநகரப் பகுதிகள் உடனடி வீடு கட்ட உகந்தவை. பிரதான சாலையிலிருந்து உள்ளே செல்ல செல்ல விலை குறைத்து வாங்கலாம்.
விலை நிலவரம்: (மனை சென்ட் கணக்கில், விலை ரூபாயில்)
 திருப்பாலை 2 - 3 லட்சம்
 சோழவந்தான் 1.5 - 2 லட்சம்
 ஒத்தகடை 5 - 7 லட்சம்
 பெருங்குடி 2.5 - 3 லட்சம்
 திருமங்கலம் 2 - 3 லட்சம்
திருநெல்வேலி!
உடனடி வீடு கட்டும் தேவை உள்ளவர்கள் மட்டுமே இப்போது இடம் தேடுகின்றனர். தச்சநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் வழிகளில் தற்போது நிலைமைப் பரவாயில்லை. மதுரை வழியில் தாழையூத்து வரை குறைந்த விலையில் மனைகள் கிடைக்கின்றன. நாங்குநேரி வழியில் மிகவும் எதிர்பார்ப்போடு மனை வாங்கியவர்கள் விலை ஏற இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்கத்தான் வேண்டும்.
 விலை நிலவரம்: (மனை சதுர அடியில், விலை ரூபாயில்)
 கிருஷ்ணாபுரம் 250 - 350
 கங்கைகொண்டான் 100 - 300
 இட்டடி 200 - 200
 பழைய பேட்டை 250 - 300
 கீழமுன்னீர்பள்ளம் 250 - 300
 தச்சநல்லூர் வழி 300 - 500
 சங்கரன்கோவில் வழி 200 - 300
 தாழையூத்து 100 - 300

அயல்நாட்டுப் பழங்கள் ஆரோக்கியமா?





வெளிநாட்டுப் பொருட்களின் மீதான மோகமும், ஆர்வமும் நமக்கு ரொம்பவே அதிகம். டி.வி., லேப்டாப், ஏ.சி. என்று ஃபாரீன் பொருட்களின் மேல் இருந்த நம்பிக்கை இப்போது நாம் சாப்பிடும் பழங்கள், காய்கறிகள் மீதும் திரும்பி இருக்கிறது. 'பார் கோட் ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டு பளபளக்கும் பழங்களை, ஸ்டைலாக டிராலியைத் தள்ளிக்கொண்டு போய் வாங்க, பழக்கபட்டு விட்டோம்.
 வெளிநாடுகளில் இருந்து அதிக அளவு இறக்குமதி செய்யப்படும் பழம் ஆப்பிள். 'வாஷிங்டன் ஆப்பிள்’, 'ராயல் காலா ஆப்பிள்’, 'பியூஜி ஆப்பிள்’ என்று விதவிதமான ஆப்பிள்கள் கடைகளை அலங்கரிக்கின்றன. இந்த ஆப்பிள்களின் 'பளிச்’ தோற்றத்தைப் பார்த்தாலே வாங்கத் தூண்டும்.
ஆப்பிளின் பளபளப்புக்கு என்ன காரணம்? விவசாயியும் இயற்கை ஆர்வலருமான அரச்சலூர் செல்வம் விலாவரியாகப் பேசுகிறார்...
''வெளிநாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆப்பிள் கெட்டுப்போகாமல் இருக்க 'வேக்ஸ்’ எனப்படும் கோட்டிங், அதாவது நம் வீட்டுக்கு பெயிண்ட் அடிப்பது போல, ஒரு லேயர் அந்த ஆப்பிள் மீது பூசப்படுகிறது. சில நாடுகளில் வேக்ஸ் இடத்தை 'கெமிக்கல் கோட்டிங்’ பிடித்துக் கொள்கிறது! இது எந்த வகையான கெமிக்கல் என்பது ஆப்பிளை வாங்கும் யாருக்கும் சொல்வது இல்லை; வாங்குபவரும் இதுபற்றிக் கேட்பது இல்லை! இப்படி முலாம் பூசப்பட்ட ஆப்பிளை 'கோல்டு ஸ்டோரேஜ்’ (Cold storage) செய்து அனுப்பிவைக்கிறார்கள். இந்த ஆப்பிளை என்னதான் கழுவினாலும் அதன் மீது பூசப்பட்ட 'வேக்ஸ்’ அல்லது 'ரசாயன முலாம்’ போக வாய்ப்புக் குறைவு.
அன்னாசி, மாதுளை, திராட்சை போன்ற பழ வகைகளும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அன்னாசிப் பழத்துக்கு 'வேக்ஸ் கோட்டிங்’ கொடுக்கப்பட்டு இருந்தாலும் அதில் பாதிப்பு இருக்காது. காரணம் அந்தப் பழத்தை தோல் சீவிதான் சாப்பிடுகிறோம். மாதுளையும் அதே போலத்தான். ஆனாலும் இந்தப் பழங்களில் 'கெமிக்கல் முலாம்’ பூசப்பட்டு இருந்தால், அந்த கெமிக்கலின் தாக்கம் பழத்துக்குள் ஊடுருவிப் பாய்ந்து இருக்கவே செய்யும்.
இந்தியாவுடன் ஒப்பிடும்போது மற்ற நாடுகளில் பூச்சிக் கொல்லி மருந்துகளை குறைந்த அளவிலேயே பயன்படுத்துகின்றனர். வெளிநாடுகளில் 'களைக் கொல்லி’ மருந்துகளைத்தான் அதிக அளவில் பயன்படுத்துவார்கள். இதனால் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது. ஆனாலும் வெளியில் பூசப்பட்டு இருக்கும் வேக்ஸ் மற்றும் கெமிக்கல் கோட்டிங் எப்படி இருந்தாலும் உடலுக்குக் கேடானதுதான்!
தற்போது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள், மாதுளை, அன்னாசி போன்ற பழங்களை அரசு தடைசெய்ய வேண்டும். நம் ஊரில் கிடைக்காத பழங்களாக இருந்தால் வெளிநாட்டில் இருந்து வாங்கலாம். இது எல்லாமே இங்கேயே கிடைக்கும்போது எதற்காக வெளிநாட்டில் இருந்து பழங்களை இறக்குமதி செய்ய வேண்டும்?'' என்று கேட்கிறார்.
உருளைக் கிழங்கு, காலி ஃபிளவர், கேப்சிகம், கேரட், ஃப்ருகோலி போன்ற காய்கறிகளும் வெளிநாடுகளில் இருந்து இங்கே இறக்குமதியாகின்றன. இவை அனைத்தும் வெளிநாடுகளில் பதப்படுத்தி இந்தியாவுக்கு வருகின்றன. இந்தக் காய்கறிகள் இந்தியாவிலும் விளைகின்றனவே!
உணவு ஆலோசகர் ஷைனி சந்திரனிடம் பேசினோம். 'வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பழங்கள் எந்த வெப்பநிலையில் குளிர்விக்கப்படுகிறது? எவ்வளவு நாட்கள் ஸ்டோரேஜ் செய்திருப்பார்கள் போன்ற விவரங்கள் எதுவும் நமக்குத் தெரியாது. பதப்படுத்தப்பட்ட பிறகு குறைந்தது 45 நாட்களுக்குப் பிறகுதான் இந்தப் பழங்கள் மார்கெட்டுக்கு வந்து சேரும். இப்படி வருவதால் அவற்றில் இயல்பாக இருக்கும் சத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது.
பழங்கள் பறிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குள் சாப்பிடுவது நல்லது. அப்போதுதான் அதில் உள்ள சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும். வெளிநாட்டுப் பழங்களின் மீது தடவப்பட்டு இருக்கும் வேக்ஸ் கத்தியை வைத்துச் சுரண்டினால்தான் போகும். அப்படியே சாப்பிடுவது உடல்நலத்துக்கு ஆரோக்கியம் இல்லை. பார்ப்பதற்கு 'பளிச்’சென இருப்பதால், 'வெளிநாட்டுப் பழம் எவ்வளவு ஃபிரஷ்ஷா இருக்கு.,.’ என்ற நினைப்பில் பலர் வாங்குகின்றனர். இந்தப் பழங்களில் பூச்சியோ புழுவோ பார்க்க முடியாது.
நம் ஊர் பழங்களில் பூச்சி, புழு இருப்பது இயல்பு. பறவைகளோ, பூச்சிகளோ கடித்த பழங்கள் என்றால் அதை நம்பி தைரியமாக வாங்கலாம். காலி ஃபிளவரில் புழு இருப்பதைப் பார்த்து முகம் சுளிப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். உண்மையில் அதுதான் பூச்சிக்கொல்லி, ரசாயனம் ஏதும் இல்லாத நல்ல காலி ஃபிளவர்.
நல்ல உணவுப் பொருட்கள் எதுவாக இருந்தாலுமே அது இரண்டு நாட்களில் அழுகிவிடும். அண்மையில் எனக்குத் தெரிந்தவர் ஒருவர் வெளிநாட்டு ஆப்பிளை வாங்கி காரில் வைத்திருந்தார். அதை அவர் 12 நாட்களாக எடுக்க மறந்துவிட்டார். அதன் பிறகு எடுத்துப் பார்த்தபோதும் அந்த ஆப்பிள் கெட்டுப்போகாமல் அப்படியே புத்தம்புதியதாக இருந்தது. அப்படியானால் அந்த ஆப்பிள் கெட்டுப்போகாமல் இருக்க எந்த அளவுக்கு அதில் ரசாயனம் சேர்த்திருக்க வேண்டும்?  நினைத்தாலே பகீரென இருந்தது.
இயற்கையில் பிரஷ்ஷாக நம் ஊரில் எவ்வளவோ பழங்கள் சீசனுக்குத் தகுந்தாற்போல கிடைக்கிறன. அந்தப் பழங்களை வாங்கிப் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது. கொய்யாப் பழம், சீத்தாபழத்தில் இல்லாத சத்துக்களா வெளிநாட்டு பழங்களில் இருக்கின்றன? கிராமத்துப் பக்கம் சந்தைகளிலும், தள்ளு வண்டிகளிலும் பழங்களை பேரம் பேசி வாங்கிய காலமெல்லாம் போய், நாகரிகத்தின் உச்சத்தில் நாம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பழங்களை வாங்குவதை கௌரவமாக நினைக்கிறோம். அது உடல்நலத்துக்கு நல்லதில்லை என்பதை எப்போது உணரப் போகிறோம்?'' - வேதனையோடு சொன்னார் ஷைனி சந்திரன்.
- கே.ராஜாதிருவேங்கடம்
அட்டை, படங்கள்: ஜெ.தான்யராஜூ
மாடல்: வைஷாலி
 நலம் காக்கும் நம்ம ஊர் பழங்கள்
நம் ஊரில் கிடைக்கும் பழங்களையே மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர் சித்த மருத்துவர்கள்.
 மாம்பழம் - உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
 கொய்யா - எலும்பின் தன்மையை உறுதியாக்கும்.
 மாதுளை - வறட்டு இருமலையும், மலச்சிக்கலையும் குணப்படுத்தும்.  
 விளாம்பழம் - பித்தத்தை சரிப்படுத்தும்.

ஆறாம் திணை

கூவாத, பறக்காத பிராய்லர் கோழிகளை உருவாக்குதல், கார்னெட் தாதுக்களைக் கழுவிக் களவாடிவிட்டு வெற்றுக் கடல் மண்ணை வீசுதல், கொழுப்பில்லா கூடுதல் புரதம் உள்ள பாலை, மரபணு மாற்றிய கால்நடையில் இருந்து கறப்பது என நவீன அறிவியலும் தொழில்நுட்பமும், 'வளர்ச்சி’ என்ற பெயரில் இந்தப் புவியின் மீதும் பிற தாவர உயிரினங்களின் மீதும் நடத்தும் வன்முறை உச்சத்தில் இருக்கும் காலம் இது!
'இந்தப் பழம் ஏன் மேலே போகாமல் கீழே வருகிறது?’ என்ற நியூட்டனின் சிந்தனையிலும் சரி, 'கறந்த பால் முலை புகா; கடைந்த வெண்ணெய் மோர் புகா; விரிந்த பூ, உதிர்ந்த மலர் மரம் புகா’ என எழுதிய சிவவாக்கியரின் சிந்தனையிலும் சரி, அறிவியலே அடித்தளம். நியூட்டன் தொடங்கிய புள்ளிக்கு நியூகோமனும் ஜேம்ஸ் வாட்டும் வரைந்த கோலங்கள்தாம், நீராவி என்ஜினில் இருந்து தொழில் புரட்சி வரையிலான வளர்ச்சி!  
ஆனால், அதே 'வளர்ச்சி’ என்ற பெயரில் தொழில்நுட்பம் கொண்டுவந்ததுதான் 'வெள்ளைச் சர்க்கரை’. உண்மையில் மதுவையும் புகையையும் போல தடைசெய்யப்பட வேண்டிய பொருள் இந்த வெள்ளைச் சர்க்கரை. ஆனால், இன்று சர்க்கரை, உணவு அரசியலில் அரிசிக்கும் கோதுமைக்கும் அடுத்தபடியாக உள்ளது. உலக சர்க்கரை நோயாளிகள் பட்டியலில் இந்தியர்களை முதல் இடத்தில் தள்ளியதற்கும், பெருவாரியான பெண்களின் ஆஸ்டியோபோரோசிஸ் என்ற இடுப்பு வலிக்கும், இன்னும் பல வகையான கேன்சர் நோயின் வளர்ச்சிக்கும் வெள்ளைச் சர்க்கரை ஆற்றிய பங்கு அளப்பறியது.
நாம் இனிப்பு சாப்பிடாதவர் அல்ல. நிறையவே சாப்பிட்டிருக்கிறோம். தஞ்சை நாயக்க மன்னர் விஜய ராகவ நாயக்கர் எழுதிய 'இரகுனாதப்யுதய’ நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் இனிப்புப் பட்டியலைப் பாருங்கள். கஜ்ஜாயம், அதிரசம், மோதகம், சாரத்லு, மிகடசட்லு (பாசந்தி), பன்னீர் பாயசம், சீரகப் பாயசம், குளிர் பாயசம், திரட்டுப் பால், சீகரணி, தேங்காய்ப் பால் என லாலா கடையில்கூட கிடைக்காத இனிப்புகள் ஒரு வேளை உணவில் பரிமாறப்பட்டுள்ளது. அந்த இனிப்புகள் அத்தனையும் அப்போது வெல்லத்திலும், பனைவெல்லத்திலும், தேனிலும்தான் செய்யப்பட்டிருந்தன. வெள்ளைச் சர்க்கரையில் அல்ல. எந்த வகையிலும் இந்த இயற்கையின் இனிப்புக்கு மாற்றாக வர இயலாத வெள்ளைச் சர்க்கரை, தொழில்நுட்ப உதவியால் ஒட்டுமொத்தமாகத் திணிக்கப்பட்டுவிட்டது.
தனக்குத் தேவையான சர்க்கரையை தினையில் இருந்தோ, அரிசியில் இருந்தோ, கிழங்கில் இருந்தோ, கீரையில் இருந்தோ நம் உடல் கிரகித்துக்கொள்ளும். தனியே வெள்ளைச் சர்க்கரை தேவையற்றது. ஆனால், இன்றைக்கு ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட நேரடியாகவோ மறைமுகமாகவோ தினசரி 30 முதல் 40 கிராம் வரை வெள்ளைச் சர்க்கரை சாப்பிடுகிறோம். கரும்பை, சர்க்கரை ஆலைக்கு மட்டுமே தர வேண்டும் என சட்டமிட்டு வெல்லத்தை ஒழித்து, வெள்ளைச் சர்க்கரை கோலோச்ச தொழில்நுட்பம் வழிவகுத்துவிட்டது. ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பும், உண்பவர் உடலுக்கு நன்மையும் தரக்கூடிய வெல்லம் ஓரம் கட்டப்பட்டதற்கு, 'வெல்லம் சீக்கிரம் கெட்டுவிடும். நீர் உள்வாங்கும். தரமான உற்பத்தி இல்லை’ என அச்சுபிச்சுக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. உண்மைக் காரணம் வெள்ளை சர்க்கரையின் பின்னணியில் உள்ள உணவு அரசியலும், ஆல்கஹால் அரசியலும்தான். இன்று இட்லிக்குப் பதிலாக சோள அவல் புகுத்தப்படுவதும், வடநாட்டு கோதுமைச் சப்பாத்தியைப் புறந்தள்ளி வெள்ளை பிரெட் வருவதும், கனிமச் செறிவான கல் உப்பை மறக்கடித்து, 'அயோடைஸ்டு சோடியம் குளோரைடு’ எனும் ரசாயனத்தை 'சாப்பாட்டு உப்பு’ எனத் திணிப்பதும் தொழில்நுட்ப அறிவியல் போர்வையில் உள் நுழையும் வணிகமே தவிர, வேறு என்ன?
'வளர்ச்சி’ என்பது, இங்கே பரிணாமமாக இல்லாமல் வன்முறையாகத் திணிக்கப்படுகிறது. காப்புரிமைகளை கடைசிவரை காசாக்க,  மனிதம் முற்றிலும் மறுக்கப்படுகிறது. எதிர்த்துக் கேள்வி கேட்கும் திறன் உருவாகாதபடி, நம் கல்வியை கொத்தடிமை, கோப்படிமை, கொள்கையடிமை என வடிவமைத்துவிட்டார்கள். 'இப்போ என்ன குறைச்சல்? எல்லாரும் சௌகரியமாத்தானே இருக்காங்க’ என அன்று, 'பருத்தி வாங்க, மிளகு வாங்கத்தானே வாராங்க’ என கிழக்கிந்தியக் கம்பெனியை வெள்ளேந்தியாக வரவேற்றது போல, இப்போதும் பேசச் செய்திருக்கிறது.
அன்று ஆட்சிக் கட்டிலில் ஏறிய 'வெள்ளை’ இன்று நம் உணவுத் தட்டுகளை ஆக்கிரமித்துக் கொண்டது. கொஞ்சம் வெள்ளேந்திகள்; நிறைய வெள்ளைய(ர)டிமைகள்!

-Vikatan

இந்திய சினிமா 100 கொண்டாட்டத்தில்... from Vikatan

ஃபாரீன் சரக்கு price @ chennai

From Time pass vikatan


எவனாவது வெளிநாட்டில் இருந்து சரக்கோட வந்துருக்கான்னு தெரிஞ்சா போதும் போன் போட்டு, 'மச்சி, வூடு ஃப்ரீயாத்தான் கீது, உன் தங்கச்சி அவங்கம்மா வூட்டுக்குப் போயிக்கீது'னு திடீர் புளியோதரை மாதிரி வீட்டை ''திடீர் பார்' ஆக மாற்றிவிடும் நபரா நீங்கள்... இதோ உங்களுக்காக சென்னையில் கிடைக்கும் ஃபாரீன் சரக்குகளின் ரேட் விபரம் :
விஸ்கி
ரெட் லேபிள் : 1,400 ரூபாய் முதல் 1,900 வரை (ஆளைப் பொறுத்தது).
பிளாக் லேபிள் : 2,300 முதல் 2,800 வரை.
டபுள் பிளாக்: 2,800 முதல் 3,000 வரை.
கோல்டன் லேபிள்: 4,000 முதல் 5,000 வரை.
ப்ளு லேபிள்: 13,000 முதல் 15,000 வரை.
ஷிவாஸ் ரீகல்:  3,000 முதல் 3,500 வரை.
புராஜெக்ட் விஷயமா சும்மா ரெண்டு வாரம் யு.எஸ். போயிட்டு வந்தவன்கூட நான்லாம் ஒன்லி ஜே.டி.தான் சாப்பிடுவேன்னு சீன் போடுவான், ஜே.டி. என்றால் ஜேக் டேனியல்ஸ் அமெரிக்க விஸ்கி: 2,500 முதல் 3,000 வரை.
கோர்டன் டிரை ஜின்: 1,200 முதல் 1,400 வரை.
வோட்கா
ஸ்மிர்ன் ஆஃப் வோட்கா: 1,200 முதல் 1,400 ('பப்’பாக்களின்  தி மோஸ்ட் வான்ட்டட்)
ஸ்மிர்ன் ஆஃப் சின்னமோன்: 2,000 முதல் 3,000 (மெய்யாலுமே 'பட்டை’யில் செய்தது, படு டிமாண்டான பிராண்ட்).  
கிரே கூஸ் வோட்கா (750 மி.லி): 2,000 முதல் 2,400 வரை.
ஃபின்லாண்டியா வோட்கா: 1,500 முதல் 2,000 வரை (வாசனையே வராதாம் பாஸ்!)
ரம்  
பக்கார்டி ரெகுலர்: 1,400 முதல் 1,500 வரை.
பக்கார்டி பல்வேறு மணங்களில்: 1,500 முதல் 1,800 வரை.
கரீபியன் பியூர் பிளாக் ஹார்ட்கோர்: 4,000 முதல் 6,000 வரை (டிமாண்டான சரக்கு).
ஈரோப்பியன் பிராண்டி
மெட்டெக்சா: 1,800 முதல் 2,000 வரை.
கோர்வைசர் வி.எஸ்.ஒ.பி. நெப்போலியன்: 4,000 முதல் 4,500 வரை.
ரெமி மார்டின் VSOP :  5,000 முதல் 6,000 வரை.
ரெமி மார்டின்  XO : 16,000 முதல் 18,000 வரை.  
கேமூஸ் கோனியாக்: 5,000 முதல் 6,000 வரை.
ஒயின் ( பிரான்ஸ் ): 500 முதல் 1,200 வரை.
ஒயின்  (ஆஸ்திரேலியா): 800 முதல் 2,000 வரை.
இதெல்லாம் எழுதும்போதுதான் ஒரு மேட்டர் கேள்விப்பட்டேன், ரெமி மார்ட்டின் லூயிஸ் XIII என்று ஒரு சரக்கு இருக்கிறதாம். சென்னையில் அதன் விலை 2 லட்சத்து 40,000 ரூபாயாம், எங்க ஊருப் பக்கம் ஒரு டாஸ்மாக் பாரையே ஏலத்துக்கு எடுத்தாகூட இம்புட்டு வராதே!