From Nanayam Vikatan..
வண்டலூர் 2,500 - 4,000
ஊரப்பாக்கம் 2,000 - 2,500
மறைமலைநகர் 2,000 - 2,500
திருநின்றவூர் 600 - 1,000
திருமழிசை 600 - 1,200
பூந்தமல்லி 800 - 1,500
ஒரகடம் 400 - 500
செங்குன்றம் 600 - 1,500
வண்டலூர் 3,800 - 5,500
சோழிங்கநல்லூர் 4,000 - 4,500
பெருங்குடி 4,000 - 4,500
ஒரகடம் 3,000 - 4,500
மறைமலைநகர் 3,000 - 3,500
ஆவடி 2,600 - 3,500
அம்பத்தூர் 2,700 - 3,800
பூந்தமல்லி 2,800 - 3,200
குன்றத்தூர் 2,800 - 3,200
சத்துவாச்சாரி 400 - 2,000
ரங்காபுரம் 500 - 2,500
ஆட்டோ நகர் 800 - 1,000
காந்தி நகர் 1,000 - 2,000
அடுக்கம்பாறை 300 - 450
தொரப்பாடி 400 - 600
அரியூர் 250 - 800
சேலம் ரியல் எஸ்டேட் நிலவரம் தற்போது ஆவரேஜ்தான். தாரமங்கலம் சாலை, அடிவாரம் பகுதிகள் மக்கள் விரும்பும் இடங்களாக உள்ளது. இதுதவிர, ஓமலூர், கமலாபுரம் பகுதிகளில் ஓரளவு மூவிங் உள்ளதாகச் சொல்கின்றனர். கோவை புறவழிச்சாலையும் ஓரளவு வளர்ச்சிகண்டு வருகிறது. முன்பு ஒரு வாரத்திற்கு இரண்டு, மூன்று இடங்களையாவது முடிப்போம். இப்போது வாரத்திற்கு ஓர் இடம் முடிப்பதற்கே அலையவேண்டியிருக்கிறது என்கின்றனர் புரோக்கர்கள். புரோக்கர்களின் ஆதிக்கம் குறைந்திருப்பதாகவும், அதன்காரணமாக விலை ஏற்றம் மட்டுப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
ஓமலூர் 1,000 - 1,500
மகுடன்சாவடி 1,000 - 2,000
அயோத்திபட்டினம் 1,000 - 1,500
தாரமங்கலம் சாலை 1,000 - 1,500
காளிப்பட்டி 1,000 - 1,500
விநாயகா மிஷன் 4,000 - 4,500
மத்திகிரி 2 - 5 லட்சம்
டைட்டன் சிட்டி 2 - 4 லட்சம்
டி.வி.எஸ். 4 - 5 லட்சம்
பாகலூர் சாலை 1.5 - 3 லட்சம்
பதனபள்ளி 4 - 5 லட்சம்
மூக்கண்ட பள்ளி 3 - 5 லட்சம்
திண்டல் 2,000 - 4,000
பள்ளிப்பாளையம் 500 - 800
கொல்லம்பாளையம் 400 - 800
லக்காபுரம் 1,000 - 2,000
சாவடிப்பாளையம் 300 - 600
விலை நிலவரம்: (மனை சென்ட் கணக்கில், விலை ரூபாயில்)
சின்னியம்பாளையம் 6 - 10 லட்சம்
வடவள்ளி 4 - 7 லட்சம்
துடியலூர் 2.5 - 4 லட்சம்
ஒண்டிப்புதூர் 5 - 6 லட்சம்
பாப்பம்பட்டி 3 - 4 லட்சம்
காரமடை 2 - 4 லட்சம்
மேட்டுப்பாளையம் 2 - 4 லட்சம்
சரவணம்பட்டி 2,500 - 3,500
விளாங்குறிச்சி 2,500 - 3,500
குரும்பாளையம் 2,000 - 2,500
திருவானைக்காவல் 1,000 - 2,500
ஏர்போர்ட் 1,000 - 1,500
பசுமை நகர் 1,000 - 1,500
அரியமங்கலம் 1,200 - 200
துவாக்குடி 600 - 800
ஸ்ரீரங்கம் 3,700 - 4,200
திருவானைக்காவல் 3,500 - 4,000
எடமலைப்பட்டி புதூர் 3,000 - 3,500
பால்பண்ணை 2,800 - 4,000
நாஞ்சிக்கோட்டை சாலை 300 - 500
மேலவஸ்தாசாவடி 600 - 1,000
ரெட்டிபாளையம் 500 - 700
பள்ளியக்ரஹாரம் 250 - 700
வல்லம் 300 - 500
கீழவஸ்தாசாவடி 250 - 500
திருப்பாலை 2 - 3 லட்சம்
சோழவந்தான் 1.5 - 2 லட்சம்
ஒத்தகடை 5 - 7 லட்சம்
பெருங்குடி 2.5 - 3 லட்சம்
திருமங்கலம் 2 - 3 லட்சம்
கிருஷ்ணாபுரம் 250 - 350
கங்கைகொண்டான் 100 - 300
இட்டடி 200 - 200
பழைய பேட்டை 250 - 300
கீழமுன்னீர்பள்ளம் 250 - 300
தச்சநல்லூர் வழி 300 - 500
சங்கரன்கோவில் வழி 200 - 300
தாழையூத்து 100 - 300
நாணயம் விகடன் ரியல் எஸ்டேட் சிறப்பிதழுக்காக தமிழ்நாடு முழுக்க மனை விலை நிலவரங்கள் எப்படி இருக்கிறது என்பதை அறிய களமிறங்கினோம். நாம் சுற்றிப் பார்த்த அனைத்து ஊர்களிலும் கடந்த ஒரு வருடமாக ரியல் எஸ்டேட் பெரிய வளர்ச்சி காணவில்லை என்பது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் உண்மை. இதற்கு என்ன காரணம், நிலைமை எப்போது சீரடையும் என விசாரித்தபோது ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், புரோக்கர்கள் எல்லோருமே ஒருமித்த குரலில் தங்களது வருத்தங்களைப் பதிவு செய்தனர்.
''வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டதன் காரணமாக முதலீட்டு நோக்கில் மனைகள் வாங்குவது குறைந்துவிட்டது. சந்தை மதிப்பு உயர்வாக இருந்து அரசு வழிகாட்டி மதிப்பு குறைவாக இருந்தபோது பத்திரப்பதிவு செலவும் மக்களுக்கு சகாயமாக இருந்தது. தற்போது மனையின் விலையும் அதிகம்; பத்திரப்பதிவுக்கு ஆகும் செலவும் அதிகம் என்கிறபோது இடம் வாங்க பலரும் யோசிக்கவே செய்கின்றனர்'' என்றார்கள் புரோக்கர்கள்.
உடனடி வீடு கட்ட சாத்தியமுள்ள மனைப் பிரிவுகள் மட்டுமே தற்போது விற்பனையாகிறது. முதலீட்டு நோக்கில் புறநகர்ப் பகுதிகளில் போடப்பட்டுள்ள மனைகள் எல்லாமே தற்போது தேக்கத்தில்தான் உள்ளது என்கின்றனர்.
இப்போதுள்ள நிலை அப்படியே நீடித்தால் விலை இறங்க வாய்ப்புள்ளதா என்றால் அதற்கும் சாத்தியமில்லை. ஏற்கெனவே முதலீட்டு நோக்கில் வாங்கியவர்கள் விலை குறைத்துத் தர தயாராக இல்லை. அதேநேரத்தில், விறுவிறுப்பு இல்லாத காரணத்தால் சொல்கிற விலைக்கு வாங்குவதற்கு ஆட்களும் தயாராக இல்லை என்கின்றனர். மொத்தத்தில் வாங்குவதற்கும் விற்பதற்கும் ஆளில்லாமல் எந்த ஆக்ஷனும் இல்லாமல் இருக்கிறது தமிழக ரியல் எஸ்டேட் தொழில். இனி ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் 'ரியல்’ நிலவரங்களைப் பார்ப்போம்.
சென்னை!
பெருநகரத்தின் தேவைக்கு ஏற்ப சென்னையின் ரியல் எஸ்டேட் மூவிங் உள்ளது. ஆனால், கைடுலைன் வேல்யூ அதிகரித்த பிறகு விற்பனையில் கொஞ்சம் தேக்கம் அடைந்துள்ளது. அதேபோல ஃப்ளாட் விற்பனையிலும் தேக்கம் நிலவுவதாகச் சொல்கின்றனர். வீடோ, மனையோ புறநகர்ப் பகுதிகள் நடுத்தர மக்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.
விலை நிலவரம்:
(மனை சதுர அடி, விலை ரூபாயில்)
(மனை சதுர அடி, விலை ரூபாயில்)
அடுக்குமாடி வீடுகள் (சதுர அடி, விலை ரூபாயில்)
வேலூர்!
கடந்த பத்து வருடங்களில் வேலூர் அதிக மாற்றங்களைச் சந்தித்துள்ளது. இந்த மாற்றங்களுக்கு சென்னை - பெங்களூரு பைபாஸ் சாலை மிக முக்கிய காரணம். இது ரியல் எஸ்டேட் துறையிலும் எதிரொலிக்கிறது. ஆனால், இரண்டு வருடங்களுக்கு முன் இருந்த வேகம் இப்போது இல்லை. தேவைக்கு மட்டுமே இடம் கைமாறுகிறது. சத்துவாச்சாரி முதல் ரத்னகிரி வரை உடனடியாக வீடு கட்ட தோதாக மனைகள் இருக்கின்றன. ஃப்ளாட்கள் பெரிதாக இன்னும் புழக்கத்திற்கு வரவில்லை.
விலை நிலவரம்: (மனை சதுர அடி, விலை ரூபாயில்)
சேலம்!
விலை நிலவரம்: (மனை சதுர அடி, விலை ரூபாயில்)
ஓசூர்!
மனை தேவைகள் எப்போதும் இருந்து கொண்டிருக்கும் நகரங்களில் ஒன்று ஓசூர். பக்கத்தில் இருக்கிற பெங்களூரு நகரத்திற்கு ஈடாக வளர்ந்து வருவதால் ரியல் எஸ்டேட் தொழிலும் சிக்கல் இல்லாமல் இருக்கிறது. குடியிருப்பதற்கு ஏற்ப வசதியான மனைகள் குறைவாக இருப்பதும் இன்னொரு காரணம். மத்திகிரி, அத்திப்பள்ளி சாலை, பாகலூர் போன்ற பகுதிகள் இப்போதும் மக்களின் குடியிருப்பு தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. தனிமனைகள் தவிர, 30 லட்சம் முதல் வசதிக்கு ஏற்ப டவுன்ஷிப் வீடுகளும் ஓசூரில் தாராளமாகக் கிடைக்கும்.
விலை நிலவரம்: (மனை சென்ட் கணக்கில், விலை ரூபாயில்)
ஈரோடு!
பைபாஸ் வருது, பஸ் ஸ்டாண்ட் வருது என்றே இடத்தை விற்றார்கள். பஸ் ஸ்டாண்டும் வரவில்லை. பைபாஸ் ரோடு வந்தும் பயனில்லை என்பதுதான் இன்றைய நிலைமை. ஆனால், எவ்வளவு விலை ஏறினாலும் பெருந்துறை வழியில் உள்ள ஈர்ப்பு மட்டும் மக்களுக்கு குறைந்தபாடில்லை. தற்போதைய நிலவரப்படி ஈரோட்டின் ஹாட்ஸ்பாட் திண்டல்தான். லக்காபுரம் பகுதியை நடுத்தர மக்கள் கவனிக்கலாம்.
விலை நிலவரம்: (மனை சதுர அடியில், விலை ரூபாயில்)
கோவை!
கோவை ரியல் எஸ்டேட் சத்தமில்லாமல் அமைதியாக இருக்கிறது. என்றாலும், புதிய மனைப் பிரிவுகளும், விளம்பரங்களும் குறைந்தபாடில்லை. சூலூர், மேட்டுப்பாளையம், காரமடை, துடியலூர் என புறநகரப் பகுதி களிலும் உடனடி வீடு கட்ட மனைப் பார்க்கலாம். வடவள்ளி, தொண்டாமுத்தூர் பகுதிகளும் உடனடியாக வீடு கட்ட தோதான பகுதிகள் என்றாலும், விலை நிலவரம் ஆச்சர்யமூட்டும். ஃப்ளாட்களின் விற்பனை மிகவும் மந்தமாக இருக்கிறது.
அடுக்குமாடிக் குடியிருப்பு: (சதுர அடி விலை ரூபாயில்)
திருச்சி!
விரிவடையும் நகரத்தின் தேவைக்கு ஏற்ப ரியல் எஸ்டேட் நிலவரம் ஆவரேஜாக இருக்கிறது. சென்னை வழியில் சமயபுரம் பகுதிகள், வயலூர் சாலை, தஞ்சை வழியில் துவாக்குடி வரை என நகரத்தின் நான்கு திசைகளிலும் நகர விரிவாக்கம் உள்ளது. அடுக்குமாடி வீடுகளும் திருச்சியில் வளர்ந்து வருவது சாதகமான விஷயம்.
விலை நிலவரம்: (மனை சதுர அடியில், விலை ரூபாயில்)
அடுக்குமாடிக் குடியிருப்பு (சதுர அடி விலை ரூபாயில்)
தஞ்சாவூர்!
கடந்த இரண்டு வருடங்களாக சரியான விவசாய உற்பத்தியில்லை. இதனால் மக்களிடம் பணப்புழக்கம் இல்லை. மேலும், தஞ்சாவூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப் படலாம் என்கிற எதிர்பார்ப்பும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நீடிக்கிறது. மருத்துவக் கல்லூரி, வல்லம் சாலை, புதிய பேருந்து நிலையப் பகுதிகள், நாஞ்சிக்கோட்டை சாலை என நகரத்தை ஒட்டிய பகுதிகளில்தான் குடியிருப்புகள் வளர்ந்து வருகிறது. உடனடியாக வீடு கட்ட பள்ளியக்ரஹாரம் பகுதியைத் தேர்ந்தெடுக்கலாம்.
விலை நிலவரம்: (மனை சதுர அடியில், விலை ரூபாயில்)
மதுரை!
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை ரியல் எஸ்டேட் தொழில் உச்சத்தில் இருந்த மதுரையில், இப்போதைய நிலவரப்படி புதிய மனைப் பிரிவுகள் எதுவும் புதிதாக முளைக்கவில்லை. பழைய மனைப் பிரிவுகளில் ரீசேல் என்கிற வகையில் உள்ளது என்றாலும் முதலீட்டு நோக்கம் வெகுவாக குறைந்துள்ளது. நாகமலை புதுக்கோட்டை, நத்தம் சாலை, ஒத்தகடை, திருமங்கலம் என புறநகரப் பகுதிகள் உடனடி வீடு கட்ட உகந்தவை. பிரதான சாலையிலிருந்து உள்ளே செல்ல செல்ல விலை குறைத்து வாங்கலாம்.
விலை நிலவரம்: (மனை சென்ட் கணக்கில், விலை ரூபாயில்)
திருநெல்வேலி!
உடனடி வீடு கட்டும் தேவை உள்ளவர்கள் மட்டுமே இப்போது இடம் தேடுகின்றனர். தச்சநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் வழிகளில் தற்போது நிலைமைப் பரவாயில்லை. மதுரை வழியில் தாழையூத்து வரை குறைந்த விலையில் மனைகள் கிடைக்கின்றன. நாங்குநேரி வழியில் மிகவும் எதிர்பார்ப்போடு மனை வாங்கியவர்கள் விலை ஏற இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்கத்தான் வேண்டும்.
விலை நிலவரம்: (மனை சதுர அடியில், விலை ரூபாயில்)